Breaking
Mon. Dec 23rd, 2024

தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆகவும், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 48 ஆகவும் வரையறுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள் 45 பேரையும், பிரதி அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் பொறுப்புக்களுக்கு 48 பேரையும நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆளும் கட்சியின் இந்த யோசனை உத்தியோகபூர்வமாக நேற்று நாடாளுமன்ற செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கையை நாடாளுமன்றின் ஊடாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென 19ம் திருத்தச் சட்டத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த விதந்துரைக்கு அமைய அனுமதி பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஆளும் கட்சி அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களின் விபரங்களை நாடாளுமன்றில் சமர்ப்பித்து அனுமதி கோரியுள்ளது.

இந்த யோசனை நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட உள்ளது.

அமைச்சர்களின் எண்ணிக்கை நிர்ணயம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி கட்சி கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post