Breaking
Sat. Sep 21st, 2024

பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் பயன்படுத்துவதற்காக விசேட தீர்வையற்ற வாகனங்கள் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் இறக்குமதி செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை பிரதியமைச்சர் நிமல் லன்சா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள ஆகியோர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

தான் 85 இலட்சம் ரூபாய் பெறுமதியான டொயோட்டா வி8 வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக நிமல் தெரிவித்தார்.

இதேவேளை, தன்னுடைய சொந்த பணத்தில் டொயோட்டா வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக தலதா அத்துகோரள  தெரிவித்தார்.

இவை, அமைச்சுக்கு ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்கள் அல்ல.

இதேவேளை, தமக்கு வழங்கப்பட்ட தீர்வையற்ற வாகன அனுமதி பத்திரத்தை கொண்டு அமைச்சருக்கான வாகனத்தை கொள்வனவு செய்யவுள்ளதாகவும் அவர்கள் இருவரும் குறிப்பிட்டனர்.

வெள்ளம், மண்சரிவு மற்றும் கொஸ்கம ஆயுதக்கிடங்கு வெடிப்பு அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் முற்றுப்பெறும் வரை அமைச்சருக்கான வாகனங்களை கொள்வனவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே தீர்வையற்ற வாகன அனுமதி செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post