விசேட செயற்திட்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம ஜெர்மனிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
சர்வதேச மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர் அமுனுகம இன்று (2) ஜெர்மனிக்கு புறப்பட்டுச் செல்கின்றார்.
இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கி வரும் பிரதான பிரச்சினைகள் தொடர்பிலான சர்வதேச மாநாடு ஒன்றில் அமைச்சர் பங்கேற்கவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பிலேயே அமைச்சர் அமுனுகம இந்த மாநாட்டில் பங்கேற்கின்றார். ஜெர்மனியின் பிராங்பொர்ட் நகரில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
நகர அபிவிருத்தி தொடர்பில் இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கி வரும் பிரதான பிரச்சினைகள், பிரதான இலக்குகள் இலங்கையின் பெரு நகர அபிவிருத்தி, உட்கட்டுமான வசதிகள் அபிவிருத்தி போன்ற விடயங்கள் குறித்து இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இன்று முதல் 8ம் திகதி வரையில் மாநாடு நடைபெறும் என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச கணக்காய்வு நிறுவனமொன்று இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.