ரஸீன் ரஸ்மின்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் காணிகளை பிடித்து அங்கு அரபு நாட்டு முஸ்லிம் குடும்பங்களை மீள்குடியேற்ற முயற்சிப்பதாகவும் ஒருசில அரசியல்வாதிகள் கூறி முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே காணப்படும் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
முல்லைத்தீவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஹிஜ்ராபுரம் கிராமத்தில் முஸ்லிம் மக்களை சந்தித்த அமைச்சர் ஹிஜ்ராபுரம், நீராவிப்பிட்டி, தண்ணீரூற்று, குமாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களை சந்தித்ததுடன், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.
இதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன்,
இன்று வன்னி முஸ்லிம்கள் மீள்குடியேற்ற விடயத்தில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மன்னார் மரிச்சிக்கட்டி கிராம மக்கள் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற முடியாமல் தமது இருப்பிட உரிமையை உரிதிப்படுத்திக் கொள்ளவும், வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தவும் இரண்டு இலட்சம் கையெழுத்துக்களைப் பெற்று அதனை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கையளிப்பதற்குரிய நடவடிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மரிச்சிக்கட்டிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று இனவதக் கும்பல் திட்டமிட்டு வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுப்பதற்கும், என்னமீது அபாண்டாமக பழிசுமத்துவதற்கும் முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. வுpல்பத்து பகுதியில் எனக்கு சொந்தமாக வாழைத் தோட்டம் இருப்பதாக கூறுகிறார்கள். வுpல்பத்து காட்டில் நான் பலவந்தமாக பிடித்து வைத்துள்ள காணியை பாதுகாப்பதற்காகவே இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வதாக வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.
நான் மன்னார் தாராபுரத்தைச் சேர்ந்தவன். வில்பத்து காட்டுப்பகுதியில் காணி பிடிப்பதற்கு எனக்கு என்ன தேவை இருக்கிறது. ஆந்த பிரதேசத்தில் எனக்கு ஒரு அங்குல காணிகூட இல்லையென்பதை மிகவும் தைரியமாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
ஆத்துடன், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் காணிகளை பிடித்து அங்கு அரபு நாட்டு முஸ்லிம் குடும்பங்களை மீள்குடியேற்ற முயற்சிப்பதாகவும் ஒருசில அரசியல்வாதிகள் கூறி முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே காணப்படும் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்கள்.
எனவே, மக்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். இன்று நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு பல முனைகளில் இருந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏங்களிடம் இனவாதம், பிரதேசவாதம் கிடையாது. ஆவ்வாறு பார்த்து நான் ஒருபோதும் அரசியல் செய்ததும் இல்லை. அன்று இறுதி யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை ஒரு குறுகிய காலத்திற்குள் அவர்களது சொந்த இடத்தில் மீள்குடியேற்றிய நான் 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட வன்னி முஸ்லிம்களை அவர்;களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்யவில்லை என்பது எனக்கு எப்போதும் வேதனைக் கொடுக்கிறது.
எனவே, முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினை மற்றும் வாக்காளர் பதிவு உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகள் விரைவில் நிவர்த்தி செய்துகொடுக்கப்படும் என இந்த நேரத்தில் உறுதியாகக் கூறிகொள்ள விரும்புகிறேன்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிரந்தரமாக வாழும் குடும்பங்;கள் முதலில் 2015ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பதிவை மேற்கொள்ளுங்கள். அடுத்தாக முல்லைத்தீவை நிரந்தர வதிவிடமாகக் கொண்டு இருப்பிட வசதியில்லாமல் வெளிமாவட்டங்களில் வாழும் குடும்பங்களுக்கு விஷேட பத்திரமொன்றை சமர்ப்பித்து அவர்கள் வாழும் ஊர்களிலேயே வாக்காளர் பதிவை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளேன். இதில் எவரும் குழப்பமடையத் தேவையில்லை.
ஓற்றுமையாக இருப்தன் மூலமே எமது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும். இன்று சிலர் தமது சுயநலத்திற்காக சமூகத்தை காட்டிக்கொடுக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். என்னை அரசியலில் இருந்து அழிப்பதற்கு முயற்சிக்கிறார்கள். பதவி, பட்டங்கள், அரசியல் இருப்பு என்பவற்றை தீர்மானிப்பதும், கொடுப்பதும் இறைவன் மட்டுமே. எனது சமூகத்தின் நலனுக்காக எனது பதவியைக் கூட இராஜினாமா செய்யவும் தயாராகவே இருக்கிறேன். எனது சமூகத்திற்கு உதவி செய்யாமல் அமைச்சரவையை அலங்கரிப்பதற்கு எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை என்றார்.
ஆர்.ரஸ்மின்
முல்லைத்தீவு