Breaking
Sat. Jan 11th, 2025

–  காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்-

சு.க பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது ஊர்ஜிதமாகவுள்ளதாக குறிப்பிடப்படும் நிலையில் அவரது பாதுகாப்;பை கருத்திற் கொண்டு – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக கொழும்புத் தகவல்களிலிருந்து தெரியவருகின்றது.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று (21)காலை 10.30 மணிக்கு அமைச்சர் பைத்திரிபால சிறிசேன பங்குபற்றவிருந்த ஊடகவியலாளர் மாநாடு இந்த நிமிடம் வரை ஆரம்பமாகவில்லை என தெரியவருகின்றது.

ஊடகவியலாளர் மாநாடு 10.30 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டமையால் உள்ளுர் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் நகர மண்டபத்தை சூழ்ந்திருப்பதாக அங்கிருக்கும் எமது விஷேட செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்தக் கட்டத்தில் – ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் அவசர கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ள ரணில் விக்ரமசிங்க அக்கூட்டத்தை நிறைவு செய்து மைத்திரியை அழைத்துக்கொண்டு குறித்த ஊடகவியாளர் மாநாட்டுக்கு வரலாம் என்ற பேச்சும் நகர மண்டபத்தை சூழ்ந்துள்ள ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசப்படுகின்றது.

10.30 என்று அறிவிக்கப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு பிற்பகல் 01 மணிக்கு நடைபெறும் அல்லது மாலை 04 மணிக்கு இடம்பெறும் என்ற பேச்சும் இங்கு அடிபடுவதாக எமது விஷேட செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சுப் பதவி , சு.க பொதுச்செயலாளர் பதவி என்பவற்றிலிருந்து இன்று அல்லது நாளை இராஜிநாமா செய்யவுள்ளதாகவும் நம்பகரமாகத் தெரியவருகின்றது.

இந்தப் பின்னணியில்தான் அவர் பாதுகாப்பை கருத்திற் கொண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தனது இல்லத்தில் மைத்திரியை தங்கவைத்திருப்பதற்கு காரணம் என்றும் கூறப்படுகின்றது.
சந்திரிக்காவின் வீட்டில்தான் மைத்திரி இருக்கின்றார் என்ற பேச்சும் நகர மண்டபத்தை சூழவுள்ள ஊடகவியலாளர் மத்தியில் பலமாக பேசப்பட்டு வருகின்றது.

இது இவ்வாறிருக்க அமைச்சர் தனது பதவிகளை இராஜினாமா செய்ததன் பின்னர் அவருடன் இணைந்துகொள்ள சுமார் 15ம் – 25ம் இடைப்பட்ட சு.கா அமைச்சர்களும் எம்.பிக்களும் தயாராக இருப்பதாக தெரியவருகின்றது.

இவர்களுள் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட அமைச்சர்கள் 10 பேரில் அறுவர் உள்ளடங்குவதாக நம்பகமாக தெரியவருகின்றது.

அமைச்சர்களான ராஜித சேனாரத்தின, லக்ஸ்மன் செனவிரத்ன ,ரெஜினோல்ட் குரெ ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

thank you – srilankamuslims

Related Post