Breaking
Fri. Dec 27th, 2024

அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணி இன்று லஞ்ச மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்றை செய்துள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது மீன்பிடித்துரை அமைச்சராக இருந்த சமயம் அவர் மோசடியாக 2 ஆயிரம் மில்லியன் ரூபாயை பெற்றுக்கொண்டார் என்று குற்றம் சுமத்தியே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர, பலவந்தமாக இந்த வளங்களை அமைச்சர் ராஜித சேனாரட்ன சூறையாடியுள்ளதாக தெரிவித்தார்.

எனவே சிறந்த ஆட்சியின் கீழ் இவ்வாறான மோசடிகளை மேற்கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Post