Breaking
Mon. Dec 23rd, 2024
-கே.சி.எம்.அஸ்ஹர்-
அமைச்சர் றிசாத் பதியுதீன் ,வடமாகாணத்தில் இருந்து 1990ல் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த அம்மக்களின் மக்கள் பிரதிநிதி இம்மக்களின் அதிக வாக்குகளை பெற்றவர் இவரே,வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் 23 வருடங்களாகப் படுகின்ற அகதிவாழ்வையும் ,அவல வாழ்வையும் இவரைவிட அதிகம் அறிந்தவர் யாரும் இருக்க முடியாது.
இவரின் ஒரே சிந்தனை தனது அரசியல் காலப்பகுதிக்குள் எப்படியாவது வஞ்சிக்கப்பட்ட வடபுல முஸ்லிம்களைக் கௌரவமாக மீளக்குடியேற்றி விடவேண்டும் என்பதே ஆகும்.
பொதுசன முன்னணி அரசின் வெற்றிக்கும்,ஜனபதிபதியின் வெற்றிக்கும் இவரும்,இம்மக்களும் செய்தவை காலத்தால் மறக்கமுடியாது.புத்தளம் ஆலம்குடா மைதானத்தில் இம்மக்களின் ஒன்று பட்ட சக்தியை அறிந்து கொண்ட ஜனாதிபதி என்றுமே மறக்கமாட்டார்.

 இயல்பிலே பாதிக்கப்பட்ட மக்கள் மீது இரக்கம் கொண்ட ஜனாதிபதி மீள்குடியேற்ற அமைச்சு ,கைத்தொழில் வர்த்தக அமைச்சு போன்றவற்றை றிசாத் பதியுதீன் அவர்களுக்கு வழங்கியுள்ளார்.மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது 3லட்சம் தமிழ் மக்களை மீள்குடியேற்றி சர்வNதுச நாடுகளின் பாராட்டுக்களையும் இவர் பெற்றுக்கொண்டார்.துரதிஸ்டவசமாக அப்போதய நாட்டு நிலைகாரணமாக முஸ்லிம்களை குடியேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. நிலைமை சாதகமாக வரும்போது அமைச்சு கைமாறிவிட்டது.

அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் ஜனாதிபதி தொடக்கம் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை அனைவருடன் சிறந்த உறவையும் பேணிவருபவர் .சாதாரண எளிய மக்களாலும் மிகவும் இலகுவில் அணுகக்கூடிய அமைச்சரும் இவரே.வடபுல முஸ்லிம் மக்களை ,சனாதிபதி,அமைச்சர் பசில் ராஜபக்ஷ போன்றோரின் ஒத்துழைப்புடன் விரைவில் மீளக்குடியேற்றும் நடவடிக்கைகளை இவர் எடுத்து வருகின்றார்.முஸ்லிம் நாடுகளில் இருந்து ஸகாத் நிதி மூலம் வீடமைப்புத்திட்டங்களையும் பெற்றுக் கொடுத்துவருகிறார்.

 இம்மக்களை மீளக்குடியேற்றத் தொடங்கியதும் காணிப்பிரச்சினை பூதாகரமாக எழுந்தது.இவர்களின் பிரதேசத்தில் இருந்த பெரும்பாலான அரசகாணிகள் சிலரின் வலியுறுத்தலின் படி தமிழ்மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.1990ல் அங்கு வாழ்ந்த குடும்பங்களைவிட 5மடங்கு அங்கு மீளக்குடியேற்றச் சென்றால் காணிக்கு என்ன செய்வது.மேலும் சில பிரதேசக் காணிகள் பாதுகாப்பு உயர்வலயமாக மாற்றப்பட்டுள்ளன.(உ10 ம்)சிலாபத்துறை ஆகவே இம்மக்களுக்கு காணிகளை சட்டரீதியாகப் பெற்றுக் கொடுப்பதற்காக ஜனாதிபதி,பிரதமர்,உரிய அமைச்சர்கள்,மாவட்டச்செயலாளர்,வன இலாக்கா அதிகாரிகள்,பிரதேச செயலாளர் போன்றோருடன் பேசி குறிப்பிட்ட காணிகளை சட்டரீதியாக விடுவிக்கப்பட்டு பிரதேச செயலக காணிக்கச்சேரி மூலமே மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டு உரிய குடியேற்ற நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.

 இதுதான் உண்மை இதற்கு மாறாக அரச காணிகளை பலாத்காராமாகக் கைப்பற்றும் முயற்சிகள் எதுவுமே நடைபெறவில்லை. அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் 1 அடிக்காணியைக் கூட சட்டத்திற்கு முரணாக கைப்பற்றவில்லை.மாறாக காணியற்ற தம்மக்களுக்காகச் சட்டரீதியாகப் பெற்றுக் கொடுத்ததில் என்ன தவறு இருக்கின்றது.மறிச்சுட்டிக்கட்டி மக்களின் காணிப்பிரச்சினையை மையமாக வைத்து பலசேனை அங்கு களமிறங்கியது.மறிச்சுக்கட்டி மக்கள் தமது காணியைத்தருமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனைத்தாங்க முடியாத களத்தில் உள்ள இனவாத சக்திகள் பலசேனவை களத்தில் இறங்கியுள்ளன.மறிச்சுக்கட்டிப்;பிரச்சினை தொடர்பாக எதுவுமே தெரியாமல் இனவிரோத ,மதவாத ,பொறாமைச் செயற்பாடுகள் திட்டமிட்டு அமைச்சரின் நற்பெயரை கெடுப்பதற்காக பலவழிகளில் முயற்சி செய்து வருகின்றனர்.அமைச்சர் 500 மில்லியன் நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்குதல் செய்துள்ளமையால் பலபுதிய அமைப்புக்கள் ஊடாக போலிப்பிரச்சாரங்கள் முன்கொண்டு செல்லப்படுகின்றன.

 அண்மையில் இணையத்தளங்களில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ,மன்னார்,முல்லைத்தீவு,வவுனியா போன்ற மாவட்டங்களில் 18000 ஏக்கர் வனப்பகுதியை அழித்துவிட்டார். இவர் சூழலை அழிக்கும் ஒருவராகச் செயற்பட்டு வருவதாக சுற்றாடல் பாதுகாப்புக் குழு எனும் முகமூடிக்குள் மறைந்து கொண்டு. 04 குழுக்கள் அறிக்கை விட்டுள்ளன.

 01.சுற்றுச்சூழல் நீதிக்கான மையம்.

02.சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை
03.இலங்கை சுற்றுசு;சூழல் காங்கிரஸ்
04.இயற்கைக்கான பொளத்த அமைப்பு

 #பச்சை மரங்களை அநியானமாக வெட்டவேண்டாம்’

#நாளை மறுமைய (உலக அழிவு) ஏற்;படும் என்றாலும் உன் கையில் மரக்கிளை கிடைப்பின் அதனை நாட்டிவிடு’
#ஒருவர் மரத்தை நாட்டி அதன் அறுவடைகளை பறவைகளோ விலங்குகளோ மனிதர்களோ உண்டால் அது ஒரு சதகாவாகும்.(தர்மம்)

 இவ்வாறு இஸ்லாம் இயற்கைளைப்பாதுகாப்பதை வலியுறுத்தி உள்ளது.இதை ஒவ்வொரு முஸ்லிமுமு; அறிவான்.மீளக்குடியேறுகின்ற முஸ்லிம்கள் தமது வளவில் பலன் தரக்கூடிய மா,பலா,புளி,தென்னை,கொய்யா,தோடை,தேசி,தேக்கு,காயா போன்ற மரங்களையும் மீள நட்டுவருகின்றனர்.இதனால் சூழல் சமநிலை பேணப்படும்.என்பதை யாரும் அறியாமல் இருக்க முடியாது.

இனக்குரோதத்தை மையமாகக் கொண்டு இயங்கும் மேலே சொல்லப்பட்ட நான்கு குழுக்களிடம் பின்வரும் கேள்விகளை கேட்க விடும்புகிறேன்.

 #23 வருடத்தின் பின்பு ஒருவர் தான் குடியிருந்த மண்ணிற்கு மீளக்குடியேறிச் சென்றால் அங்கு காடுகள் மண்டியிருக்கும். இது பாதுகாக்கப்பட்ட ஒரு வனமா?

#இலங்கையில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனக்காணியில் வில்பத்து தவிர வேறு எங்கும் குடியேற்றத்திட்டங்கள் இல்லையா?

#பெறுமதியான மரங்கள் வெட்டப்படவில்லையா?(உடவளவை)

#கடற்கரையோரங்கள் அழிக்கப்படடு ஹோட்டல்கள் அமைக்கப்படுவதில்லையா?

#துறைமுக அமைப்பு,விமானத்தள அமைப்பு,அதிவேக பாதை என்பவற்றால் சூழலுக்கு பாதிப்பு இல்லையா?

#யுத்தத்தால் பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டதை அறிவீரா?

#மலைகள் உடைக்கப்படுவதாலட சூழலுக்கு அது சவாலாகயில்லையா?

#சேனைப்பயிர் செய்கையால் சூழலுக்கு பாதிப்பு இல்லையா?

#செங்கல் உற்பத்தியில் சூழலுக்கு பாதிப்பு இல்லையா?

#இரசாயண பசளைகள்,கிருமி நாசினிகளால் சூழலுக்கு பாதிப்பு இல்லையா?

#குடியிருப்பு பகுதிகளில் தொழிற்சாலையகள் இயங்குவதால் பாதிப்பு இல்லையா?

#வடக்க்pலிருந்து தென்பகுதியை நோக்கி ஆயிரக்கணக்கான மணல் லோட் ஏற்றிச் செல்லப்படுவது வடக்கு சூழலைப் பாதிக்காதா?

#காடுகளை அழித்து சிங்களவர்களை , தமிழர்களை குடியேற்றும் போது சூழல் மாசடைவதில்லை அவ்வாறு முஸ்லிம்கள மட்டும் குடியேற்றினால் எப்படி சூழல் மாசடைகிறது?

 #வடபுலச் சூழலைப்பற்றி அங்குள்ள மக்களைவிட உங்களுக்கு ஏன் ஏன் அதிக அக்கறை வந்துள்ளது?

நாட்டின் அபிவிருத்தியா? சூழலா? என்ற நிலை ஏற்படும் போது அங்கு அபிவிருத்திக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.(உ-ம்)விமான நிலையம் ,துறைமுகம்,வீதியமைப்பு

 ஏன் முஸ்லிம் மீளக்குடியேற்றத்தை அபிவிருத்தியாக நோக்க முடியாது.உள்நாட்டில் இடம் பெயர்ந்;தோரை 2012யில் குடியேற்றி முடிவடைந்துள்ளது.என்றால் புத்தளம்,அனுராதபுரத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் யார்?

Related Post