Breaking
Thu. Dec 26th, 2024

-முர்ஷிட் முஹம்மத்-

நிந்தவூர் அரசையடி-அட்டப்பளம் பகுதி மக்களின் நீண்டகால சுகாதாரத் தேவையாகவுள்ள வெளிநோயாளர் பிரிவை (OPD) தேர்தல் முடிந்த கையோடு நிவர்த்தி செய்வதற்கான சகல முயற்சிகளும் எங்களுடைய மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  ஆலோசனையுடன் மேற்கொள்ளப்படும்  என மக்கள் காங்கிரஸின் தேசிய சுகாதாரத்துறை பணிப்பாளரும், நிந்தவூர் அமைப்பாளருமான முன்னாள் மேல் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர். பரீட்  தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் அரசையடி வட்டார வேட்பாளர் மஜீட் அவர்களின் காரியாலயத் திறப்பு விழா மற்றும் கருத்ருத்தரங்கில் கலந்துகொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரும், முன்னாள் நிந்தவூர் தவிசாளருமான எம்.ஏ.எம் தாஹிர் உள்ளிட்ட வேட்பாளர்கள் மற்றும் பெருந்திரளான ஆதரவாளர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related Post