Breaking
Tue. Dec 31st, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் மன்/பி.பி.பொற்கேணி அ.மு.க பாடசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டு மாடிக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நிகழ்வு, அதிபர் எம்.எச்.ஹஸ்பி தலைமையில் இன்று (28) இடம்பெற்றது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளரும், மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ரிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந் நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர் அலிக்கான் ஷரீப், வலயக்கல்வி பணிப்பாளர், முசலி பிரதேச சபை உறுப்பினர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

(ன)

Related Post