Breaking
Mon. Dec 23rd, 2024
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில்  மற்றும்  வர்த்தக அமைச்சருமான  ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், மாந்தை பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நேற்று (10) ஆரம்பிக்கப்பட்டது. 
ஆண்டான்குளம் ஆயிசா மஸ்ஜித், சொர்ணபுரி முகைதீன் ஜும்மா பள்ளி, மினுக்கன் அன்னூர் ஜும்மா மஸ்ஜித், வட்டக்கண்டல் முகைதீன் ஜும்மா பள்ளி, கட்டைக்காடு முஹைதீன் ஜும்மா பள்ளி  மற்றும் பள்ளிவாசல்பிட்டி  பாடசாலைக்கான சுற்று மதில் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மாந்தை பிரதேச இணைப்பாளர் சனூஸின் தலைமையில்,பல இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டங்களில் பிரதம அதிதியாக அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளரும், முன்னாள்  மாகாண  சபை உறுப்பினருமான  றிப்கான்  பதியுதீன் மற்றும் சிறப்பு  விருந்தினர்களாக  மாந்தை பிரதேச சபை தவிசாளர் செல்லத்தம்பு ஐயா, மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
நடைபெற்ற தேர்தலில் வாக்குகள்  வழங்கப்பட்டதன் பிரதிபலனாக அனைத்து பிரதேசங்களுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் இனம், மதம், மொழி பேதமின்றி  ஒன்றன் பின் ஒன்றாக பாரிய திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நேற்று இடம்பெற்ற இந்த அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வில், மாந்தை பிரதேச சபை உறுப்பினர்கள், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மன்னார் மாவட்ட திட்டப் பணிப்பாளர் முஜிபுர் ரகுமான் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும்  கலந்துசிறப்பித்தனர்.
(ன) 

Related Post