அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால், சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார், தாராபுரம் துருக்கி சிட்டி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 02 மாடி பாடசாலைக் கட்டிடம் இன்று (28/ 11/2017) உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இணைப்பாளர் முஜாஹிரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக அமைச்சரின் பிரதிநிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான சீன துணை தூதுவர் Mme Pang Chuxue ஆகியோரும், வட மாகாண சபை உறுப்பினர் அலிகான் ஷரீப் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றிருந்தனர்.
தரம் 01-05 வரையிலான மாணவர்கள் இந்தக் கட்டிடத் தொகுதியில் கல்வி பயில முடியும். அத்துடன் விழாவிற்கு வருகை தந்திருந்த சுமார் 400 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, பாடசாலை புத்தகப் பை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.