Breaking
Fri. Jan 10th, 2025

-ஊடகப்பிரிவு-

புத்தளம் கொட்டராமுல்லயில் அமைந்துள்ள  உபதபால் நிலையத்தினை சகல வசதிகளும் கொண்ட நவீன தபாலகமாக மாற்றித்தர நடவடிக்கையெடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீனினால்,  முஸ்லிம் சமயம் கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீமிடம் விடுத்த வேண்டுகோளுக்கு சாதகமான பதிலை அமைச்சர் அனுப்பி வைத்துள்ளார்.

நீண்டகாலமாக உபதபாலகமாக இயங்கிவரும் இந்த தபாலகத்தினை, பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்துவதாலும்,குளியாப்பிட்டிய கொழும்பு பிரதான வீதியில் இந்த உபதபாலகம் அமைந்திருப்பதால், இதனை தபாலகமாக  தரமுயர்த்துவதன் அவசியம் தொடர்பில் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கோரிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, அமைச்சர் ஹலீம் தபால் மா அதிபருக்கு இக்கடிதத்தினை அனுப்பியுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

Related Post