Breaking
Mon. Jan 13th, 2025

 -ஊடகப்பிரிவு-

கல்முனையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டதுடன், கல்முனை பிரதேச மக்களை சந்தித்துக் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.

மு.காவின் முன்னாள் முக்கியஸ்தர்களான ஜவாத், மொளவி ஹனீபா மதனி ஆகியோரும் இந்தக் கூட்டங்களில் அமைச்சருடன் உடனிருந்தனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தாய்மார்கள், சிறுவர்கள் ஆகியோர் இன்முகத்துடன் வரவேற்று தமது அன்பினையும், ஆதரவினையும் வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related Post