Breaking
Wed. Nov 27th, 2024

தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் வவுனியா அண்ணாநகர் பகுதியில் மீள்குடியேறியுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கென நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் நிர்மானிக்கும் பணிகள் இன்று (25  ஆரம்பித்து வைக்கப்பட்டன.

குறித்த அண்ணாநகர் மாதிரிக் கிராமங்களான படிவம் 1,2,3 ஆகிய பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்தை வழங்க, வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சின் கிழ் இயங்கும், தேசிய வீடமைப்பு அதிகாரசபை, அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் தலா ஐந்து லட்சம் பெறுமதியில் சகல வசதிகளையும் உள்ளடக்கியவாறு குறித்த வீட்டுத்திட்டம் அமைக்கப்படவுள்ளது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்ட முகாமையாளர் திருமதி.குரூஸ் தலைமையில் நடைபெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், வவுனியா நகர சபை உறுப்பினரும் இணைப்பாளருமான அப்துல் பாரி, வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் நசார், பிரதேச சபை வேட்பாளர் கனேஸ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

(ன)

 

 

 

Related Post