Breaking
Tue. Dec 31st, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB) மற்றும் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA) ஆகியன இணைந்து நடாத்திய, தொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு, களுத்துறை மாவட்டத்தில் 02 ஆம் கட்டமாக பேருவளை, தர்கா நகர் நாதா கார்டனில் இன்று (29) நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் தலைமையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பொதுசன தொடர்பாடல் அதிகாரி ஐ.எஸ்.எம்.மொஹிடீனின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பேருவளை பிரதேச சபைகுட்பட்ட கிராமங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டனர்.

பேருவளை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான, வாழ்வாதார உதவிகளை வழங்கும் செயற்திட்டத்துக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் 04 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், களுத்துறை நகர சபை உறுப்பினர் ஹிஷாம் சுஹைல், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

(ன)

Related Post