Breaking
Mon. Dec 23rd, 2024

நாடளாவிய ரீதியில் அதிகம் பேசப்படும் பாடசாலைகளுள் ஒன்றான குருநாகல், கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,  பாடசாலையின் உற்பகுதியை அழகுபடுத்தும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் உள்ளக பாதைகள் அமைக்கும் வேலைகள் நிறைவுபெற்ற நிலையில் உள்ளன.

பாடசாலையின் உள்ளக பாதை பணிகளை முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான என்.எம். நஸீர், நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

இதன்போது, குளியாப்பிடிய பிரதேச சபை உப தவிசாளர் எம்.சி. இர்பான், ரிதீகம பிரதேச சபை உறுப்பினர் அஸ்ஹர் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.

Related Post