Breaking
Sat. Nov 2nd, 2024

கடந்த காலங்களில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த நாட்டுக்கு செய்த சேவைகளை இன்று பெரும்பான்மை சமூகம் அடையாளம் கண்டுள்ளது என முன்னால் வடமேல் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவருமான என்.எம்.நஸீர் (MA) தெரிவித்தார்.

அன்மையில் குளியாப்பிடிய நகர மன்டபத்தில் தேசிய அருங்கலைகள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘சில்ப அபிமானி – 2019’ கைவினை தொழிற்துறை கண்காட்சியில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மூலம் இன்று இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடிந்த ஒரு திட்டமே இன்று இங்கு நடைபெறும் சில்ப அபிமானி திட்டமாகும்.

இந்த நாட்டில் வாழும் அனைத்து இனங்களையும் நேசிக்கும் ஒரு தலைவனாக இலங்கையின் சுதேச கைவினை கலையை பாதுகாக்கும் நோக்கில் ஒவ்வொரு கிராமங்களிலும் இவ்வாறான வேலைத்திட்டங்களை செயற்படுத்த அமைச்சர் அனுமதி வழங்கியமையை நிச்சயமாக நாம் பாரட்ட வேண்டும்.

கடந்த காலங்களில் நஷ்டத்தில் இயங்கிய பல கூட்டுத்தாபனங்களை அவரிடம் கொடுக்கப்பட்ட போதும் இன்று அவை அனைத்தும் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றம் பெற்றுள்ளது.

அதற்க்கு ஒரு நல்ல உதாரணமாக சீனி கூட்டுத்தாபனத்தை கூறமுடியும் அமைச்சர் ரிஷாட் அதனை தனது பொருப்பில் எடுக்கும் போது சீனி கூட்டுத்தாபனம் பல கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கியது இந்த நிலையில் அதனை மூடுகின்ற நிலையில் பொருப்போற்ற அமைச்சர் சீனிக் கூட்டுத்தாபனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைத்தார்.

அதிக இலபமீட்டிய சீனி கூட்டுத்தாபனத்தை இன்னுமொரு அமைச்சருக்கு வழங்கிய போது உங்களுடைய பெரும்பான்மை சகோதரர்கள் வீதிகளில் இறங்கி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன் போது அக்கூட்டுத்தாபனத்தை மீண்டும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் வழங்குமாறு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர் இந்த நிகழ்வின் மூலம் இவ்வாறான ஒரு அமைச்சரின் கீழ் கடமைபுறிவதையிட்டு பெருமையடகின்றேன்.

சீனி கூட்டுத்தாபனம்போன்று நான் கடமையாற்றும் சதொச நிறுவனம் மற்றும் லக்சல, STC போன்ற பல கூட்டுத்தாபனங்கள் இன்று அதிக இலபமீட்டும் நிறுவனங்களாக அவர் மாறியமைத்துள்ளார்.

மேலும் இவ்வாறான ஒரு வாய்பை உங்களுக்கு ஏற்படுத்தித்தந்த அமைச்சர் மற்றும் இந்த கூட்டுத்தாபனத்தின் தலைவி உற்பட அனைவருக்கும் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்றும் தெரிவித்தார்.

அருங்கலைகள் பேரவையின் தலைவி ஹேசானி போகொல்லாகம தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்.

புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா,முன்னால் வடமேல் மாகாணசபை முதலமைச்சர் தர்மஸ்ரீ தசநாயக, குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் இர்பான், குருநாகல் மாநகரசபை உறுப்பினர் அஸார்தீன், குளியாப்பிடிய பிரதேசசபை உறுப்பினர் சபீர் மற்றும் அருங்கலைகள் பேரவையின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Post