அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, ஒந்தாச்சிமடம் பிரதேச யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலியினால் தையல் பயிற்சி நிலையம் (24) திறந்து வைக்கப்பட்டது.
பிரதி அமைச்சரின் மகளிர் இணைப்பாளர் மீனா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிராமிய பொருளாதார அமைச்சின் 6,50,000 ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் 16 யுவதிகளுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பிரதேச யுவதிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் திட்டத்துக்கமைய, தையல் பயிற்சி நெறியை முடித்த யுவதிகளுக்கு தையல் இயந்திரங்களும் பிரதி அமைச்சர் அமீர் அலியினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.