கைத்தொழில் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பிரதேச சபை எல்லைக்குற்பட்ட 5 கிராமங்களுக்கான கதிரைகள் மற்றும் சீமெந்து பொதிகள் வழங்கும் நிகழ்வு உயிலங்குல வட்டார இணைப்பாளர் தயா அவர்களது தலைமையில் இடம்பெற்றது
110000 /= நிதியில் நாகதாழ்வு கிராம மக்களுக்கான
சீமெந்து பொதிகள்
திருக்கேதீஸ்வரம் சிவபுரம் கிராமத்திற்கு 80000/= நிதியில் RDS,WRDS சங்கங்களுக்கான கதிரைகள் 150000 பெறுமதியான சீமெந்து பொதிகள்
#40000/= நிதி ஒதுக்கீட்டில் சிறுநாவற்குளம் கிராமத்து WRDS சங்கத்திற்கான கதிரைகள்
நொச்சிக்குளம் WRDS சங்கத்திற்கான 40000/= நிதி ஒதுக்கீட்டில் சமையல் பாத்திரம் போன்றவை இன்றய தினம் வழங்கி வைக்கப்பட்டது
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கைத்தொழில் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் றிசாட் பதியுதீன்
மேலும் இந்நிகழ்வில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் தேசிய இளைஞர்சேவைகள் மன்ற வன்னி மாகாணப் பணிப்பாளர் முனவ்வர் மற்றும் இணைப்பாளர் தயா உட்பட RDS WRDS நிர்வாகத்தினர் கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.