Breaking
Mon. Dec 23rd, 2024

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் திவுரும்பொல, ஜாமியா மனாருல் ஹுதா அரபுக்கல்லூரியின்  மேல்மாடிக் கட்டிட அபிவிருத்திப் பணிகள் நேற்று முன்தினம் (16) முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

திவுரும்பொல மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் அப்துல்லாஹ்வின் வேண்டுகோளுக்கிணங்க, அபிவிருத்திப் பணிகளுக்காக சுமாார் இருபது இலட்சம் ரூபா நிதி, அமைச்சரினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் முன்னாள் குளியாப்பிடிய பிரதேச சபை உறுப்பினர் இர்பான், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸ் அமால்தீன் மற்றும்  மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், கல்லூரியின் அதிபர், நிர்வாகசபை உறுப்பினர்கள், பிரதேசவாசிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

 

 

 

 

Related Post