Breaking
Tue. Dec 24th, 2024

அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னால் தவிசாளரும் நுகர்வோர் அதிகார சபை நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் அவர்களின் முயற்சியின் பயனாக கௌரவ அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களது நிதியொதுக்கீட்டில்…

பாலமுனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் புதிய கட்டட வேலைகளுக்காக ரூபா இருபது இலட்சம் பெறுமதியான வேலைத்திட்டம்

அல்ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு புதிய நுழைவாயில் அமைக்கும் பணிக்காக ரூபா இருபது இலட்சம் பெறுமதியான வேலைத்திட்டம்

சின்னப்பாலமுனை றியாழுல் ஜன்னா ஜும்ஆ பள்ளிவாசல் சுற்றுமதில் அமைக்க ரூபா பத்து இலட்சம் பெறுமதியான வேலைத்திட்டம்

கொங்றீட் போடப்படாமல் எஞ்சியுள்ள பாலமுனை நான்காம் பிரிவு வீதிகளுக்கான கொங்றீட் இடும் வேலைத்திட்டம்

என்பனவற்றின் சகல வேலைத்திட்டங்களையும் ஆரம்பிகும் முகமாக தொழிநுற்ப உத்தியோகத்தருடன் (TO) இன்று(03) சென்று பார்வையிட்டதோடு வேலைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியும் உத்தரவும் வழங்கப்பட்டது…

இதன்போது ஜும்ஆ பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கௌரவ எச்.எம்.சிறாஜ் மற்றும் பாடசாலை அதிபர், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள். அ.இ.ம.கா. பாலமுனை அமைப்பாளர் பி.எம்.ஹுஸைர். எனப் பலர் கலந்து கொண்டனர்.

 

Related Post