கொழும்பு கிரேண்ட் பாஸ் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டம் என்பதை வலியுறுத்தியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்,இது குறித்து இன்று பிரதமர் தி.மு.ஜயரத்னவையும் சந்தித்துள்ளார்.
அதே வேளை இன்று காலை மீண்டும் கிரேண்ட் பாஸ் பள்ளிக்கு சென்ற அமைச்சர் அங்கு சேதத்துக்குள்ளானதை பார்வையிட்டுள்ளார்
சம்பவம் குறித்து கேள்வியுற்றதும் வன்னியில் தேர்தல் பிரசாரத்தில் இருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் உடனடியாக கொழும்பு திரும்பியதுடன்,கிரேண்ட் பாஸ் பள்ளிவாசலுக்கும் விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.