Breaking
Mon. Dec 23rd, 2024

திருகோணமலை மாவட்டத்தில் புதிய
உள்ளுராட்சி புதியசபைகள் உருவாக்கமும் , நகர மற்றும் மாநகர சபைகளாக தரமுயர்த்தும் மும்மொழிவுகள்  கையளிப்பு.

திருகோணமலை மாவட்டத்தில் புதிய தோப்பூர் , புல்மோட்டை , கச்சகொடிதீவு , முள்ளிபோதனை , சம்பூர், வானெல, குடாக்கரை பிரதேச சபைகள் உருவாக்குவதற்கும்.

கிண்ணியா நகரசபைக்கு , கிண்ணியா பிரதேச சபைலிருந்து உப்பாறு கிழக்கு பகுதியை இணைப்பதற்கும்

மூதூர் கந்தளாய் பிரதேச சபைகளை நகரசபைகளாகவும் , திருகோணமலை நகரசபையை மாநகர சபையாகவும் தரமுயர்த்துவதட்கும்

இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் உள்ளுராட்சி திருத்த சட்டமூலதின்போது பிரதமர் , மற்றும் அமைச்சர் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் நுவரலியா மாவட்டத்தில் புதிதாக உருவாகவிருக்கும் உள்ளுராட்சி சபைகளை வர்த்தமாணி பிரசுரிக்கும் போது இச்சபைகளையும் உள்ளடக்ககும் வகையில் அமைவதற்கும்,

உள்ளுராட்சி திருத்த ஆணைக்குழு, ஆணையாலயாளர் அசோக பீரிஸ் அவர்களின் தலைமையிலான குழுவிடம் கடந்த ஆண்டு வழங்கிய வாக்குமூலம் , ஒப்படைக்கப்பட்ட மும்மொழிவுகள் உள்ளடக்கியதாக
பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் இரண்டு வருடத்திற்கு மேலான அதீத ஈடுபாட்டுனான முயற்சியின் மற்றுமொரு பகுதியாக

அமையபடவிருக்கின்ற உள்ளூராட்சி சபைகள் குறித்து தயாரிக்கப்பட்ட மும்மொளிவுகள் வர்த்தக கைத்தொழில்கள் அமைச்சரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான ரிஷாத் பதியுதீன் அவர்களும் , திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணை தலைவரும் , அகில இலக்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களும்
உள்ளுராட்சி மாகாண சபைகள் சபைகள் அமைச்சர் பைசல் முஸ்தபா அவர்களிடம் இன்று உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சில் நடைபெற்ற விஷேட கலந்துரையாடலில் இதனை கையளித்தனர்.

அத்துடன் தோப்பூர் புத்தி ஜீவிகளால் தோப்பூர் உப பிரதேச செயலகத்தை அடிப்படையைக் கொண்டு இப்பிரதேசத்தின் நீண்ட கால முக்கிய கோரிக்கை தோப்பூர் பிரதேச சபை உருவாக்கதிட்காக தயாரித்து பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களுடன் கையளித்த மும்மொளிவையும் இச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சர் ரிஷாத பதியுதீணும் இணைந்து அமைச்சர் பைசல் முஸ்தபா அவர்களிடம் கையளித்தனர்.

மேலும் மாகாண சபைகள் அமைச்சில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் உள்ளுராட்சி பிரிப்புகள் , மாகாண சபைகளின் வட்டார எல்லைகள் தொடர்பாகவும் நீண்ட கலதுரையாடல் அமைச்சர்கள் பாராளுமன்ற உருப்பினருக்கிடையே நடைபெற்றது.

நவம்மர் 2 திகதிக்கு முன்னர் மாகாண சபைகளின் வட்டார எல்லைகள் குறித்த பொதுமக்களின் கருதுக்களையும் முன்வைக்கலாம். தவறாது ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை செய்வோம்.

பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா தயாரிக்கப்பட்ட மஹ்ரூப் அவர்களின் பல வருட தொடர்ச்சியான முன்னெடுப்பில் உள்ளுராட்சி புதியசபைகள் உறுவாக்கமும் , நகர மற்றும் மாநகர சபைகள் தரமுயர்த்தும் வகையில்
உள்ளுராட்சி மாகாண சபைகள் சபைகள் அமைச்சர் பைசல் முஸ்தபா அவர்கள் ஆரம்ப நடவடிக்கையாக இது தொடர்பான தகவல்கள் திரட்டும் பணிகள் மாவட்ட அரச அதிபரை பணித்ததட்கமைய பத்திரிகையில் பொதுமக்களுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“எமது உரிமைக்கான முயற்சிகள் வெற்றியடைய உங்கள் துஆக்களில் சேர்த்து கொள்ளுங்கள்”

Related Post