முசலி பிரதேசத்தின் மீள்குடியேரிய கிராமங்களின் இளைஞர்களுக்கான விளையாட்டு துறையின் வளர்ச்சிக்காக ரூபா 50 இலட்சம் நிதியினை மீள்குடியேற்ற செயலனியூடாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் ஒதுக்கியுள்ளார்கள்.
பாலைக்குழி,கொண்டச்சி,அகத்திமுரிப்பு அலக்கட்டு,கரடிக்குழி மரிச்சிக்கட்டி முள்ளிக்குளம் போன்ற கிரமங்களுக்கு மைதானம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும் நிகழ்வு முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலருமான றிப்கான் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் அலிக்கான் ஷரீப் முசலி பிரதேச சபை தவிசாளர் ஹலீபது சுபிஹான் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் முசலி பிரதேச சபை பிரதி தவிசளர் முஹுசீன் றைசுதீன் மற்றும் மீள்குடியேற்ற செயலனியின் மன்னார் மாவட்ட இனைப்பாளர் முஜீப் அவர்களும் பிரதேச சபை உறுப்பினர்களும்,கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.