Breaking
Sun. Jan 12th, 2025

அமைச்சர் றிஷாட் பதியுதீன் மூலம் ஒதுக்கப்பட்ட கம்பெரலிய வேலைத்திட்டம் மன்னார் பிரதேசபைக்குட்பட்ட கிராமங்களில் தவிசாளர் முஜாஹிரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது…

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தவிசாளர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்ட விடயங்கள் இந்த பிரதேச மக்களுக்கு செய்து கொடுக்கப்படும் அதேபோல் இந்த பிரதேசத்தில் வாழும் இளைஞ்சர் யுவதிகளின் பிரச்சினைகள் அதேபோல் இந்த பிரதேசத்தில் இருக்கும் 83 கிராமங்கள் உள்ளது அதேபோல் 34 கிராம சேவையாளர் பிரிவுகளில் வாழும் மக்களின் பிரச்சினைகள் இந்த பிரதேசபை ஆட்சிக்காலத்தினுள் நிவர்த்தி செய்வதற்கு நாங்கள் திட்டமிட்டு செயட்பட்டு வருகின்றோம்.

எங்களின் இந்த செயற்பாட்டுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அதிகமான உதவிகளையும் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகிறார் இன்னும் இந்த மக்களுக்கு செய்யவும் இருக்கிறார். எங்களோடு இணைந்து வாழ்கின்ற தமிழ் மக்களின் தேவைகள் தீர்க்கப்பட வேண்டியதும் எங்களின் கடமையாகும் அவர்களுக்கும் எங்களால் முடிந்த அனைத்து சேவைகளையும் இனமத பேதம் இல்லாமல் செய்ய உள்ளோம் என்று தெரிவித்தார்….

இந்த நிகழ்வில் மன்னார் பிரதேசபை உறுப்பினர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டார்…

Related Post