Breaking
Mon. Dec 23rd, 2024

“சில்ப அபிமானி – 2017” சர்வதேச கைப்பணி விழாவின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (04) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பேண்தகு இருப்புக்காக மரபுசார் கைப்பணித்துறையை போசித்து, பாதுகாக்கும் நோக்குடன் தேசிய கலை பேரவையினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் சர்வதேச கைப்பணித்துறை விழா இன்றிலிருந்து 08 ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

2017 சர்வதேச கைப்பணி விழாவை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அவர்கள், கண்காட்சியையும் பார்வையிட்டார்.

அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், சந்திராணி பண்டார, இராஜாங்க அமைச்சர் சம்பிக்கா பிரேமதாஸ, தேசிய கலை பேரவை தலைவி கேஷானி போகொல்லாகம உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Post