Breaking
Tue. Dec 24th, 2024

செப்டம்பர் 16ல் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்ற அழைப்பாணை !

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை தடுத்து, முஸ்லிம்களின் பூர்வீக பூமியிலிருந்து அவர்களை விரட்டியடிக்க இனவாதிகள் இடைவிடாத தொடர் முயற்சியில் ஈடுபட்டுவருவதை உறுதிப் படுத்தும் வகையில் “ பரிசர யுக்திகேந்ரய” எனும் அமைப்பின் மூலம் வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அதனடிப்படையில் வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமாக உரிமைக்குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அவர்கள்மீது பிரதானமாக குற்றம் சுமத்தப் பட்டு எதிர் வரும் செப் 16ந் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப் பட்டுள்ளது.

அண்மைக்காலமாக இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சமகால பிரச்சினைகளுக்கு எதிராக அமைச்சர் ரிஷாத் தொடர்ந்தும் குரலெழுப்பி வருவதை இவ்வினவாத அமைப்புகள் தொடர்ந்தும் அவதானித்து வருகின்றன. தற்போது நாக பாம்பு வேடம் தரித்து பாராளுமன்றம் புக நினைக்கும் இவ்வினவாதிகளின் பிரதான இலக்காக அமைச்சர் ரிஷாத் இருந்து வருகின்றார்.

 அல்குர்ஆனுக்கு எதிராக பகிரங்கமாக கருத்துக் கூறியமைக்கு பொது பல சேனாவுக்கு சட்ட நடவடிக்கை எடுத்தமை

 கைத்தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சினுள் புகுந்து அடாவடித்தனம் புரிந்தமை

 முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த வடரேக விஜித தேரரின் ஊடக மாநாட்டை அத்துமீறி தடுத்து அடாவடித்தனம் புரிந்தமை

போன்ற வன்செயல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து, இவ்வினவாதிகளை சட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தியதில் அமைச்சர் ரிஷாத் அவர்களின் பங்களிப்பை அறிந்து அடுத்து வரும் பாராளுமன்றத்திட்கு அமைச்சர் ரிஷாத் தெரிவாவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப் படும் முயற்சி இதுவென பல சமூக ஆர்வலர்கள்

Related Post