Breaking
Mon. Dec 23rd, 2024
நாட்டில் மொத்த மரக்கறி விற்பனை நிலையமாக தம்புள்ளை சந்தை பிரபல்யமாக இருப்பதால் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனர் அதில் தூர இடங்களில் இருந்து வருபவர்கள் பல சிரமத்தை எதிர்நோக்குவதோடு நூகர்வோர்  அதிக விலை கொடுத்து மரக்கறிகளை கொள்வனவு செய்கின்றனர் இந்த நிலையை மாற்றி மக்களின் நலனுக்காகவும் வர்த்தகர்களின் நலனுக்காகவும் பல திட்டங்களை வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாத் பதியூதீன் அவர்கள் மேற்கொள்ள ஆலோசித்து வருகிறார்.
அதாவது வடக்கு தெற்கு கிழக்கு  போன்ற  மாகாணங்களில் தம்புள்ளை சந்தை போன்று மொத்த மரக்கறி விற்பனை நிலயங்களை உருவாக்க வேண்டும் என்பதே அமைச்சரின் சிந்தனையாகும் அதில் முதல் கட்டமாக மரக்கறி உற்பத்தியில் பின் தங்கிய மாவட்டமான அம்பாறையில் முதலில் மொத்த விற்பனை நிலையத்தை அமைப்பதால் அந்த மாவட்ட மக்கள் பல நன்மைகளை அடைவார்கள்.
அம்பாறை மாவட்டத்தில்  மொத்த மரக்கறி விற்பனை நிலையம்  இருந்தால் மொனறாகல பிபில பதுளை பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் மரக்கறி உற்பத்தி செய்பவர்கள் தங்களுடைய  மரக்கறிகளை  அம்பாறை மாவட்டத்தில் விற்பனை செய்ய இலகுவாக இருக்கும் அதனால் மேற்குறிப்பிட்ட பிரதேசத்தில் இருந்து மரக்கறிகள் அம்பாறை மாவட்ட மொத்த விற்பனை நிலையத்துக்கு வரும் அதனால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட வியாபாரிகள் சிரமின்றி பொருள்களை கொள்வனவு செய்து நூகர்வோருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியும் இதனால் மக்களின் பொருளாதாரத்தில் பாரிய முன்னேற்றம் அடையும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் இப்படி மக்களுக்கு பல நன்மைகள் ஏற்படும் அபிவிருத்தி திட்டங்களை வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாத் அவர்கள் செய்வதால் தங்களுடைய அரசியல் வாழ்க்கை முடிந்து விடும் எனற அச்சத்தால்  சில வங்குரோத்து அரசியல்வாதிகள் நிர்வாக அரசியல் அதிகாரத்தை கையில்  வைத்துக் கொண்டு  தடை ஏற்படுத்திவருவதையிட்டு மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அம்பாறை மாவட்ட சம்மாதுறையில் பல நூற்றுக்கணக்கான மக்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் முகமாக அமைச்சர் றிசாத் அவர்கள் தொழில் பேட்டை ஒன்றை அமைக்க முயற்சி செய்தார் அது எண்னெய் திறலும் போது சட்டி உடைந்த கதை போல் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது இது ஒரு கவலைக்குரிய விடயமாகும்.
 ஆனால் இந்த தொழில் பேட்டையை  அமைத்து இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க அமைச்ச றிசாத் அவர்கள் மிகவும் திவிரமாக முயற்சி செய்து வருகிறார் அதற்கு மக்கள் ஆதரவும் அதிகமாக இருக்கிறது அதனால் எந்த தடைகள் வந்தாலும் சொல்வதை செய்வார் சத்திய தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் என்பது மக்கள் தெரியும்.
அம்பாறை மாவட்டத்தில் அரசியல் அதிகாரம் இல்லை என்றாலும் தன்னை நம்பி நிற்கும் அந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றி அம்பாறை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தியை செய்ய வேண்டும் என்பதே அமைச்சர் றிசாத் அவர்களின் இலட்சியமாக உள்ளது அதை இன்ஷா அல்லாஹ் அவர் நிறைவேற்றுவார் என்பதில் மக்கள் நம்பிக்கை கொண்டு  அமைச்சர் றிசாத் அவர்களை சமுதாயத்தின் சத்திய தேசிய தலைவராக அம்பாறை மாவட்ட மக்கள் ஏற்றுக் கொண்டு தனது முழு ஆதரவை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தலில் அம்பாறை மாவட்ட மக்கள் மயிலுக்கு  அதிக ஆதரவு வழங்கியும் ஒரு ஆசனம் சதிகார கும்பலால் பறி போய் விட்டது அதற்கு 1600 பேர் செய்த தவறு என்று பேசப்பட்டது அந்த தவறினால் அரசியல் அதிகாரம் இல்லாததால் சத்திய தேசிய தலைவர் அமைச்சர் றிசாத்  அம்பாறையில் மேற்கொள்ள இருக்கும் அபிவிருத்திக்கு தடைகள் வருவதை இன்று சிந்தித்து கவலையடையும் மக்கள் செய்த தவறை மீண்டும் செய்யாமல் எதிர்வரும் தேர்தல்களில்அம்பாறை மாவட்டத்தில் குடியிருக்கும்  பொம்மைகளை தூக்கி வீசி விட்டு  அமைச்சர் றிசாத் அவர்களின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து அம்பாறையில் மயிலுக்கு அரசியல் அதிகாரம் வழங்க வேண்டும் என உறுதியுடன்  தீர்மானித்து உள்ளனர்.
 இதனால்அமைச்சர்  றிசாத் அவர்களின் நற் சிந்தனையால் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திகள்  ஏற்படும் மொத்த மரக்கறி  விற்பனை நிலையமும் உருவாகும் இதனால் மக்களின் வாழ்வாதாரத்தில் பாரிய முன்னேற்றம் ஏற்படும் இதற்கு அம்பாறை மாவட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தை மக்கள் விரும்பும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டும் அப்போதுதான் எமது சமுதாயம் பாதுகாக்கபட்டு நிலையான அபிவிருத்தியையும் அடைய முடியும்.
அன்று ஒரு காலத்தில் மரங்கள் நிறைந்த காட்டு பிரதேசமாக இருந்த அம்பாறை மாவட்டம் இன்று மரங்கள் அழிந்து மயில்கள் நிறைந்த சோலையாக  காட்சி அளிக்கிறது அதனால் தாயின் தாலாட்டை மறந்து மயிலின் இசையில் குழந்தைகள் நித்திரை கொள்ளும் நிலையை தந்த தலைவனுக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்து சத்திய தேசிய தலைவரை அடிக்கடி அம்பாறை மாவட்டத்துக்கு வரும்படி கோரிக்கை வைக்கின்றனர் அதனால் சத்திய தேசிய தலைவர் மிக விரைவில் அம்பாறை மாவட்டத்துக்கான நீன்ட நாள் விஜயம் ஒன்றை  மேற்கொண்டு மக்கள் ஆதரவுடன் மக்கள் நலன் சார்ந்த பாரிய அபிவிருத்திகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார் அல்லாஹ் உதவி செய்யட்டும் அவரின் சேவைகள் தொடர்வதற்கு.
ஜெமீல் அகமட் 
கொள்கை பரப்ச் செயலாளர் 
அ.இ.ம.கா.பொத்துவில் தொகுதி

By

Related Post