Breaking
Mon. Dec 23rd, 2024

( தொகுப்பு-அபூ அஸ்ஜத் )

பிஸ்மில்லாஹிர் ரஹ்மான் னிர்ரஹீம்,

 

கௌரவ குழுக்களின் பிரதி தலைவர் அவர்களே !

 இன்று அறிமுகம் செய்ய முயற்சிக்கின்ற தேர்தல் முறை விகிதாசார பிரதிநிதித்துவ முறையினுல் தொகுதிவாரித் தேர்தல் முறையாகும்.

 வர்த்தமானி பிரகடனத்தின் படி 200 பிரதிநிதிகள் மாவட்ட விகிதசரததினுாடாகவும், 37 பேர் தேசிய பட்டியலினுாடாகவும்  நியமிக்கப்பட பிரேரிக்கப்படடிருகின்றது. அதே நேரம் மாவட்ட ரீதியாக தெரிவுசெய்யப்படுகின்ற 200 பேர்களுள் தொகுதி ரீதியாக தெரிவுசெய்யபடுகின்ற 145 பாராளுமன்ற உறுப்பினரும் அடங்குவர்.

 அதாவது ஒரு கட்சிக்கு எனை பிரதி நிதிகள் உரித்தாவார் என்பதை விகிதாசார முறை மூலம் தீர்மானிக்கப்படுமே தவிர தொகுதிகளில் வெற்றிபெருகின்ற அங்கத்தவர்களை கொண்டள்ள.

 உதாரணமாக மாவட்டரீதியான 200 ஆசனங்களுள் ஒரு கட்சி சகல மாவட்டங்களிலும் விகிதாசார முறையின் கீழ் 100 ஆசனங்களை பெறுகின்றன எனவும் ஆளுங்காட்சிக்கு தேசியப்பட்டியல் மூலம் 20 ஆசனங்களும் கிடைக்கின்றன எனக்கொண்டால் அந்தக்கட்சியின் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 120. எனவே  அந்தக்கட்சியின் சார்பாக 120 பேர்தான் பாராளுமன்றம் செல்வார்கள் அவ்வரானால் தொகுதிரீதியாக தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிதுவங்களுக்கு என்ன நடை பெரும் என கேள்வி எழுகின்றது.

 உண்மையில் தொகுதிரீதியாக அளிக்கின்ற வாக்குகள் மாவட்ட ரீதியில் ஒரு கட்ச்சிக்கு எத்தனை ஆசனங்கள் கிடைகின்றனவோ அந்த ஆசனங்களுக்கான தனிப்பட்ட நபர்கள் யார் என்பதை மட்டுமே தொகுதிவாரி தீர்மானிக்கின்றது.

சில வேளை மாவட்ட விகிதாசாரத்தில் பெறப்பட்ட அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக தொகுதிகள் வெள்ளப்பட்டிருப்பின் அந்த மேலதிக எண்ணிக்கை குறித்த கட்ச்சிகுரிய தேசியப்பட்டியலினுாடாக உள்வாங்கப்படும். எனவே விகிதாசார முறையில் மவட்டங்களினூடாக பெறப்பட்டசனங்களினதும் தேசியப்பட்டியல்களினதும் கூட்டுதொகையே அக்கட்சிக்குரிய ஆசனங்களாகும்.

அவ்வாறயின் தொகுதி வாக்குகள் என்பது ஒருவகையான விருப்பத் தெரிவுவாக்குகளே.

 எனவே இத்தேர்தல் சீர்திருத்தும் அடிப்படையில் விகிதாசார முறையினதே என்றால், அந்த விகிதாசார முறையின் கீழ் வாக்கு வழங்கப்படாமல் எவ்வாறு விகிதாசார முறையில் அங்கத்தவர்களை கணக்கிட முடியும்.

 சுருங்கக் கூறின் வாக்களிக்காமல் பாராளுமன்ற அங்கத்தவர்களை இரண்டு பெரிய கட்சிகளும் பெருவதற்கான ஒரு தேர்தல் முறையாக இது பிரேரிக்கபடுகின்றது.

 மக்களை எமற்றுவதற்காக தொகுதிகளில் அளிக்கபடுகின்ற வாக்குகளை (அது உண்மையில் ஒரு வகையான விருப்பத் தெரிவு வாக்கு) எடுத்து மாவட்டத்தில் கட்சிகளுக்கு அளிக்கப்பட் வாக்குகளாக கணிக்கப்பட பிரேரிக்கப்பட்டுள்ளது. எனவே இது அடிப்படை ஜனநாயக மீறல் மட்டுமல்ல அரசியலமைப்பில் மூன்றவது சரத்தில் உத்தரவதப்படுதியுள்ள வாக்குரிமையை கேலிக்கூத்தாக்குகின்ற விசயமாகும்.

 இத் தேர்தல் எவ்வாறு சிருபான்மைகளை பாதிக்கும் ?

இத்தேர்தல் முறை அமுல்படுத்தப்படில் சிறுபான்மை பிரதிநிதிதுவங்கள் மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்டுகின்ற அதே    வேலை ஜே வி பி போன்ற சிறிய கட்சிகள் அரசியல் அரங்கிலிருந்தே நீக்கப்பட்டுவிடும்.

முஸ்லிம்களை உதாரணமாக  எடுத்து கொண்டால் அவர்கள் அண்ணளவாக பத்து விகிதம் வாழுகின்றர்கள். எனவே 237 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றில் ஆகக் குறைந்தது 23 ஆசனங்கள் அவர்களுக்கு உரித்தாகும்.

 இலங்கையில் முஸ்லிம்களுக்கென்று 09 பெரும்பான்மை தொகுதிகளே இருக்கின்றன இவற்றுள் அம்பாறை மாவட்டத்தில் 03 ஆசனங்கள், மட்டகளப்பு மாவட்டத்தில் 01 ஆசனம் ,திருகோணமலையில் 01 ஆசனமும் மன்னாரில் இரட்டை அங்கதுவர தொகுதி உருவாக்கப்பட்டால் 01 ஆசனமும் மற்றும் கொழும்பு மத்தி, ஹரிஸ்த்துவா, பேருவளஆகியன உள்ளவாங்கப்படுகின்றன. இவற்றுள் மட்டக்களப்பும் ,மன்னாரும் கேள்விக்குறிகளாக உள்ள தொகுதிகளாகும். இவைகள் தவிர்ந்த எந்த ஒரு தொகுதிகளிலும் முஸ்லிம் பெரும்பான்மை இல்லாத நிலையில், தொகுதி முறை தேர்தலில் முஸ்லிம்களால் கட்சி வேறுபாடுகளுக்கமைய அதி கூடுதலாக பெற்றுக்கொள்ளகூடிய ஆசனங்கள் 07 தொடக்கம் 09 ஆகும்.

 ஏனைய தொகுதிகளில் முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தினாலும் யாரும் வாக்களிக்க மாட்டார்கள். ஏனெனில் வெற்றி பெற முடியாது என்று நிச்சயமாக தெரிந்த ஒரு வேட்பாளருக்கு யாரும் வாக்களிப்பதில்லை. அதே நேரம் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர காட்சி போன்ற பெரிய கட்சிகளும் எந்த ஒரு முஸ்லிம் வேட்பார்களையும் நிறுதாமட்டார்கள்.

 கொழும்பு மாவட்டத்தை எடுத்து கொண்டால் 180000 இற்கு மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கின்றார்கள் எனவே அவர்களுக்கு கக் குறைந்தது 03 ஆசனங்கள் உரித்தாகும். ஆனால் கொழும்பு மத்திய தொகுதியை தவிர வேறு எந்த தொகுதியிலும் ஐக்கிய தேசிய கட்சியோ, ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சியோ ஒரு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தமாட்டார்கள்.

அதே நேரம் முஸ்லிம் காட்சிகள் அவ்வாறு நிறுத்தினாலும் வாக்குகளை பெற முடியாது. எனவே புதிய முறையின் கீழ் முஸ்லிம்களின் நிரந்தர ஆசன எண்ணிக்கை கொழும்பு மாவட்டத்தில் எந்த கட்சியயினும் ஒரே ஒரு ஆசனம் தான், அதே போன்று கண்டி மாவட்டத்தில் தற்போது 04 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இது காலத்துக்கு காலம் வேறுபடலாம் என்பது வேறு விடயம் ,னால் புதிய முறையின் கீழ் ஹரிஸ்பத்துவ தொகுதியில் மாத்திரமே ஒரு ஆசனம் .

 அதே போலதான் குருநாகல் மாவட்டத்தில் சுமார் 90,000 முஸ்லிம் வாக்குகள் இருக்கின்றன.  ஆனால் புதிய முறையின் கீழ் ஒருபோதும்

ஒரு ஆசனத்தை கூட எந்த கட்சியிலிருந்தும் பெற முடியாது. ஏனெனில் தொகுதிவரியை பார்க்கின்ற போது எந்தொரு தொகுதியிலும் கணிசமான முஸ்லிம் வாக்கு பலம் இல்லை.

எனவே இந்நிலையில் முஸ்லிம்களின் பிரநிதித்துவம் மூன்றில் ஒரு பங்கிற்கு குறைவதற்கான ஆபத்துக்கள் இருக்கின்றன. இதே நிலை தான் மலையாக மக்களை பொருத்தவரையிலும் இருக்கின்றது.

இன்னும் சிலர் எம் எச் முஹம்மத் அவர்களும், பாகீர் மாகார் அவர்களும்எவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்கள் என்று கேட்கின்றார்கள். வரலாற்றில் இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் மக்களின் மனங்களை வென்ற தலைவர்கள் இருக்கின்றார்கள். அது விதி விலக்கான சூழ் நிலைகளாகும் னால் அதுவே விதியாக மாறிவிட முடியாது. எம் எச் முஹம்மத் அவர்கள் 95 விகிதம் சிங்கள மக்கள் வாழுகின்ற பொரல்லை தொகுதியில்இருந்து வெற்றி பெற்றது அவரது தனிப்பட்ட செல்வாகோடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த தேர்தல் முறையின் கீழ் சிறுபான்மை கட்சிகள் ஒருபுறமிருக்க JVP , LSSP போன்ற சிறிய கட்சிகளின் நிலை என்ன?

 என்ற கேள்விக்கு பதில் என்ன ?

 கடந்த 30 வருட கால யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.கடந்த 5 வருட காலமாகவே மக்கள் சமாதான காற்றை சுவாசிக்கின்றனர்.அன்று ஆயுத குழுக்களில் இருந்தவர்கள் அதனை கைவிட்டு ஜனநாயக ரீதியான அரசியல் நீரோட்டத்திற்கு வருவதற்கு வழி வகுத்தது விகிதாசார தேர்தல் முறையாகும் என்பதை நாம் மறந்து செயற்பட முடியாது.எதிர்கட்சி தலைவர் நிமல் சிறபால த சில்வா தெரிவிக்க குற்றச்சாட்டு அமைச்சரவைக்கு இவை கொண்டுவரப்பட்ட போது அதனை எதிர்க்காமல் இருந்த அமைச்சர்கள் இங்கு வந்து பேசுவது என்ன நியாயம் என்கின்றார்.

நான் அவருக்கு சொல்லிக் கொள்ளும் விடயம் ,அமைச்சரவைக்குள்  கடும் எதிர்ப்புக்களை நாம் வெளியிட்டோம்,20 தொடர்பில் வர்ததமானி அறிவித்தல் வந்த போதும் நாம் அதனை மீள பெறுமாறு கோறினோம்.ஜனாதிபதி அவர்கள் வழங்கிய உறுதி மொழிகளை நம்பினோம்.இன்று இதனை பார்க்கின்ற போது கவலையளிக்கின்றது.     

வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட 1 இலட்சம் முஸ்லிம்களுடன் நானும் வெளியேறிய ஒருவன்.இன்று அந்த மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கையெடுக்கின்ற போது தென்னிலங்கையில் உள்ள இனவாத,மதவாத சக்திகள் அவற்றை இனக் கண்ணால் பார்த்து பல்வேறு தடைகளை ஏற்படுத்திவருகின்றன.30 சதவீதமான மக்களே தற்போது அங்கு சென்றுள்ளனர்,இன்னும் 70 வீதமான மக்கள் இங்கு செல்லாத நிலையில் உள்ளனர் என்பதை  இந்த சபையில் நாம் சொல்லியாக வேண்டும்.

 இந்த தேர்தல் திருத்தமானது அவசரமாக ஏன் கொண்டுவரப்பட வேண்டும்.இது யாருடைய தேவைக்காக வருகின்றது.கட்சிக்குள் இருக்கும் முரண்பாடுகளை களைவதற்காகவும்,இரு பெறும்பான்மை கட்சிகள் ஆட்சியில் மலர வேண்டும் என்பதற்காகவா  கொண்டுவரப்படுகின்றது.இதன் மூலம் இந்தநாட்டில் வாழும் சிறுபான்மை மக்களது எதிர்காலம் என்னவாகும் என்பதை நன்கு உணர்ந்ததன் பயனாகவே அனைத்து சிறுபான்மை கட்சிகளும் இந்த தேர்தல் திருத்தத்தை எதிர்க்கின்றன.

சிறுபான்மை மக்களையும்,சிறிய கட்சிகளையும் அடக்கி? ஒடுக்கும் எந்தவொரு தேர்தல் தருத்தத்திற்கும் நாம் ஒரு போதும் ஆதரவளிக்கப் போவதில்லை,

அவ்வாறு அதனையும் மீறி இது நிறைவேற்றப்படுமெனில் நாம் அனைத்து சிறிய கட்சிகளையும் அணி திரட்டி எமது உரிமைக்காக ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுப்போம் என்பதை இந்த உயர் சபையில் தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தமதுரையில் குறிப்பிட்டார்.

Related Post