அஸ்ஸலாமு அழைக்கும்
இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் இடம்பெற்ற ஆண்டாக இவ்வாண்டை குறிப்பிடலாம் அதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்களுள் தாங்களும் ஒருவர் என்று சொல்லிகொள்ளுவதில் பெருமை கொள்கிறேன்
1990ல் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்ட பல்லாயிரக் கணக்கான வட மாகாண முஸ்லிம்களில் நீங்களும் ஒருவர் என்றவகையில் தான் படிக்கும் காலத்திலேயே தான் சார்ந்த மக்களுக்குத் தன்னாலியன்ற சேவைகளைச் செய்து வந்து அரசியலில் நுளைக்கபட்டவர் என்றவகையில் அம்மக்களின் அனைத்துவித அபிவிருத்தி ஆகட்டும் கல்வியாகட்டும் மீளகுடியமர்தலாகட்டும் உங்களின் பங்களிப்பு அளப்பரியது அதனாலேயே அம்மக்களின் நெஞ்சங்களில் என்றும் முடிசூட மன்னனாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்
இலங்கையில் உள்ள சிறுபான்மையினருக்கு அடுத்து வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலானது மிகவும் முக்கியமான ஒன்றாகும் ஏனெனில் அதனைத்தொடர்ந்து அமையப்பெறும் பாராளுமன்றில்20+ திருத்தச்சட்டம் அமுல் படுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. அரசியலமைப்பின் 20 வது திருத்தம் கொண்டு வரும் போது அதில் சிறுபான்மையினருக்கான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதில் நீங்களும் உறுதியாக உள்ளீர்கள் ஏனெனில் அத்திரித்தமானது சிறுபான்மையினரை பொறுத்த வரையில் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
அமையபோகும் புதிய பாராளுமன்றின் தெரிவாக இருக்கும் சிறுபான்மையினரின் அங்கத்தவர்களை கொண்டே 20வது திருத்தத்திலும் இட ஒதுக்கீட்டின் அவசியத்தை அரசிடம் வலியுறுத்த முடியும் அந்த வகையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரை பெறக்கூடிய மாவட்டங்களாக அம்பாறை மட்டகளப்பு திருகோணமலை வன்னி என்பனவற்றை முதன்மையாகவும் முக்கியமானவையாகவும் குறிப்பிடலாம் அதிலும் அதிக பட்சம் நான்கு உறுப்பினரை பெறக்கொடிய மாவட்டமாக இருப்பதும் இலங்கை முஸ்லிம்களின் இதயமாக இருப்பதும் திகாமடுல்ல தேர்தல் மாவட்டமாகும்
விடயத்திற்க்கு வருகிறேன் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில் துரதிஷ்டவசமாக மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையே பெற முடிந்தது அதற்கு மிக முக்கிய காரணியாக திகழ்ந்தது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான நௌசாத், பேரியல் அஷ்ரப், அதவுல்லா, போறவர்களின் திட்டமிடப்படாத காய்நகர்த்தல் காரணமாக முஸ்லிம் பிரதேசங்களில் அதிகமான வாக்குகளை பிரித்ததன் மூலம் சில ஆயிரம் வாக்குகளால் முஸ்லிம் காங்கிரஸ்சின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இல்லாமல் ஆக்கப்பட்டு சிங்கள உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்தது அனைவரும் அறிந்த விடயமே
இலங்கை பிரஜை யாருக்கும் எந்த மாவட்டத்திலும் தேர்தல் கேட்கக்கூடிய உரிமை உள்ளது அந்தவகையில் இந்த முறை தேர்தலில் நீங்கள் தலைமை தாங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் குதிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியே.
உங்கள் கட்சிக்கு அம்பாறை மாவட்டத்தில் ஆதரவு இருப்பது என்பது உண்மையே ஆனாலும் அதனை பரீட்சித்து பார்ப்பதற்கு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தல் உசிதமானதாக தெரியவில்லை. நீங்கள் ஆரம்ப கட்டமாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களில் கேட்டு அம்பாறை மாவட்டத்தில் உங்கள் பலத்தை கணிப்பிட்டு அதன் பிறகு பெரிய தேர்தலான பாராளுமன்ற தேர்தலில் குதிப்பது ஆரோக்கியமானதாக அமையும் உங்கள் கட்சிக்கும் நமது சமூகத்திற்க்கும்.
ஏனெனில் உங்கள் கட்சி பலமான முதிர்ச்சியடைந்த கட்சியானாலும் அம்பாறை மாவட்டத்தை பொறுத்தவரை குழந்தையே எனவே பிறந்த உடனேயே எழும்பி நடக்க ஆசைப்பட வேண்டாம் அது சமூகத்தின் விபரீதமான முடிவுகளை உங்கள் மீது திணித்துவிடும் வரலாற்றில் அதன் பழிச்சொல் உங்களுக்கு ஆறாத வடுவாக அமையும் சில ஆயிரம் தளம்பல் வாக்குகளை நம்பி சமூகத்தை முக்கியமான தருணத்தில் பரீட்சித்து பார்க்க வேண்டாம்.
உங்களுக்கு அரசியலை நான் சொல்லி தர வேண்டியதில்லை என் எனில் பல தேர்தல்களை கண்ட அனுபவம் உங்களுக்கு உள்ளது ஆனாலும் அம்பாறை மாவட்ட நிலமை உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் புதிது. கடந்த 15 வருடங்களாக அம்பாறை மாவட்டத்திலேயே பிறந்து பல அபிவிருத்தி திட்டங்களை செய்து கொண்டிருக்கும் அமைச்சர் அதாவுல்லாவால் கூட இது வரை மிச்சமாக ஒரு வாக்கை கூட பெற முடியவில்லை. கடந்த தேர்தல்களில் அவரது வாக்கு சரிவையே கண்டுவருவது புள்ளி விபரங்களை பார்த்து நீங்களே அறிந்து கொள்ள முடியும்.
எனவே தீர்க்கமான தேர்தலில் தீர்க்கமான முடிவை எடுப்பீர்கள் என்று நம்புகின்றேன் சமூகத்தின் மீது உண்மையானபற்று உள்ளவராக நீங்கள் இருந்தால் இந்த தேர்தலை தவிர்த்து அடுத்தடுத்து வர இருக்கும் உள்ளூராட்சி தேர்தல்களில் அம்பாறை மாவட்டத்தில் உங்கள் பலத்தை பரீட்சிக்கலாம் என்று எனது தாழ்மையான வேண்டுகோள்.
இப்படிக்கு
பார்ஸான் எஸ் முஹம்மது
அட்டாளைச்சேனை.