Breaking
Wed. Dec 25th, 2024

றியாஸ் ஆதம்

வடமாகாணத்தில் பிறந்து இந்த நாட்டில் தேசிய அரசியலில் முஸ்லீம் மக்களின் அரசியல் தலைமைத்துவமாகப் பிரகாசிக்கும் அமைச்சர் றிசாட் பதியுத்தீனை வெளிநாட்டு சக்திகளுடாக தோற்கடிப்பதற்கு பல சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின்; கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிரின் முயற்சியினால் ஏறாவூர் இரும்பு வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கு வாகான உதிரிப்பாகங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் வடமாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் அரசியல் தலைவர்களால் சாதிக்க முடியாமல் போனதை எங்களுடைய கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் அவர்கள் தன்னந்தனியாக நின்று ஜனநாயக ரீதியாகப் போராடி வடபுல மக்களின் உரிமைகளையும் அபிவிருத்திகளையும் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் கவனமாக செயற்பட்டு வருகின்றார்; அதில் அவர் வெற்றியும் கண்டார்.

தற்போது அம்மக்களுக்கான மீள்குடியேற்றம், அடிப்படை வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்திக்கொடுக்க முற்படுகின்ற போது அவற்றுக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவரின் செயற்பாட்டை நிறுத்துவதற்கு சில தீய சக்திகள் முற்படுகின்றன. காரணம் இவர் இந்நாட்டிலே வாழும் முஸ்லீம்களினது ஏக தலைவராகி விடுவார் என்ற அச்சத்தின் காரணமாக சர்வதேச தீய சக்திகளின் உதவியுடன் சிலர் செயற்பட்டுவருகின்றனர். இவ்வாறான போலிக் குற்றச்சாட்டுகளுக்கு அவர் தன்னந்தனியாக நின்று பதிலலிக்க வேண்டியுள்ளது.

தற்போது வடபுல முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலைக்கு பதிலளிப்பதற்கு எந்தவொரு முஸ்லிம் அரசியல் தலைமைகளும் முன்வரவில்லை என்னைப் பொருத்த வகையில் இது அமைச்சர் ரிஷாட் பதியுத்தீனுடைய தனிப்பட்ட பிரச்சினையுமல்ல வடபுல முஸ்லிம்களின் பிரச்சினையே

அண்மைக்காலமாக வடபுல முஸ்லீம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக இனவாத அமைப்புக்களும் , சில ஊடகங்களும் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி தடுத்து நிறுத்துவதற்கு முற்பட்ட போது சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட வடபுல முஸ்லீம்களுக்கு சாதகமாக குரல் கொடுத்ததனையும் இந்நாட்டு முஸ்லீம் சமூகம் நன்கறியும்;

ஆனால் இந்த வேளையில் எமது நாட்டின் முஸ்லீம்களின் பெரும்பான்மை ஆரதவினைப்பெற்ற கட்சி என்று மார்தட்டும் ஸ்ரீ லங்கா முஸலீம் காரங்கிரஸின் தலைமை வடபுல அகதிகளின் மீள்குடியேற்றம் தொடர்பாகவோ அல்லது அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் போலிக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவோ வாய் திறக்கவில்லை குறைந்தது அந்த மக்களின் நியாய பூர்வமான உண்மைகளை சொல்வதற்குகூட முன்வரவில்லை இனிவரும் காலங்களில் இவர்களுடைய சுயநல அரசியலில் வடபுல முஸ்லீம்கள் எவ்வாறு நம்பிக்கை வைக்கப்போகிறார்கள் ஆனால் எமது ஊரின் இரும்பு வியாபாரிகளாகிய நீங்கள் வடபுல முஸ்லீம்களுக்காக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யுமளவிற்கு உங்களுக்கு இருக்கும் மனித நேயம்கூட முஸ்லிம் கட்சி தலைவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் வராமையினையிட்டு கவலையடைய வேண்டியுள்ளது அன்று எமது சமூகத்திற்காக மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால் உருவாக்கப்பட்ட இக்கட்சி இன்று சமூகத்திற்காக எதுவும் பேசாது மௌனமாக இருக்கின்றது இன்று இக்கட்சியின் தலைமைக்கு எதிராக பல பகுதிகளிலும் கூக்குரலிட்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றளவிற்கு நிலமைகள் காணப்படுகின்றது.

தேர்தல் காலங்களில் எமது மக்களின் வாக்குகளைப் பெற்று செல்கின்றார்கள், பின்னர் மீண்டுமொரு தேர்தல் வருகின்ற போது எமது பகுதிகளுக்கு வருவார்கள் ஆனால் அச்சமூகத்திற்கு ஒன்றுமே செய்ததாக தெரியவில்லை இன்று கிழக்கு மாகாண ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருக்கின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த மக்களுக்கு எவ்வளவோ பணிகளைச் செய்ய முடியும் ஆனால் ஒன்றுமே செய்ய இயலாத நிலைமையே காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்திலே வாழுகின்ற ஏழைப் பெண்கள் வெளிநாடு செல்வதினை நிறுத்தி அவர்களுக்குரிய வாழ்வாதார திட்டங்களை ஏற்படுத்தித் தருவேன் எனக்கூறிய கிழக்கு மாகாண முதலமைச்சர் எந்தவிதமான செயற்றிட்டங்களையும் இதுவரை செயற்படுத்தவில்லை இவர்கள் தேர்தல் காலங்களில் வழங்கும் போலி வாக்குறுதிகளே இவை முதலமைச்சருடைய இலக்கு பாராளுமன்றம் செல்வதே அதனை இலக்கு வைத்து ஏறாவூரில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றினை நிறுவி இரண்டாயிரம் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கவுள்ளதாக கூறிவருகின்றார். ஆனால் ஒன்றும் நடந்ததாகவில்லை.

தற்போது தனியார் நிறுவனத்தின் தையல் நிலையமொன்றினை மாத்திரம் திறந்து மக்களை ஏமாற்றியுள்ளார்கள் இன்று இவர்களின் அபிவிருத்தி என்ற பெயரில் கடந்த அரசாங்கத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களை நாடாவெட்டி திறக்கின்ற நிலமைகளே காணப்படுகின்றது. இவைகள் இவர்களினுடைய அபிவிருத்தியுமல்ல இவைகளை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும.; எமது சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் சேவைகளை செய்கின்றவர்களை இனங்கண்டு இந்த ஏறாவூர் மக்கள் தங்களது ஆதரவுகளை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Post