Breaking
Sun. Dec 22nd, 2024
-அஷ்ரப் ஏ சமத்-

வாராந்த அமைச்சரவை முடிவுகளை ஊடகங்களுக்கு அறிவிக்கும் நிகழ்வு நேற்று (10)ஆம் திகதி மு.பகல் 11.00 மணிக்கு பாராளுமன்றத்தில் அமைச்சா் டொக்டா் ராஜித்த சேனாரத்தினாவில் தலைமையில் நடைபெற்றது.

இங்கு ஊடகவியலாளா் ஒருவா் கேட்ட  கேள்வி –  அமைச்சா் றிஷாத் பதியுதீனால்  வில்பத்து காடுகள் அழிக்கப்பட்டு அங்கு மக்கள் குடியேற்றப்படுகின்றனா்    அது பற்றி அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன ? இதனை நீங்கள் அறிவீா்களா ?

அமைச்சா் டொக்டா் ராஜித்த  பதில் – அவ்வாறு அந்த அமைச்சா் அங்கு  செய்யவில்லை. வில்பத்து பிரதேசத்தில் ஒரு அங்குல நிலமுத்தில் கூட  முஸ்லீம்கள் மீள் குடியேறி காட்டை அழிக்கவில்லை. அந்த மக்கள் அப்பாவிகள் விடுதலைப்புலிகள் அவா்களை அன்று விரட்டியபோது இன்னும் அந்த  மக்கள் புத்தளத்திலேயே தற்காலிகமாக வாழ்கின்றனா்.  நானும் காணி அமைச்சராக இருந்துள்ளேன். அப்போதும் இது போன்று இரத்தினபுரி வனாந்தரத்தில் மக்கள் குடியேறியதாக ஒரு பிரச்சினை உள்ளது.  அமைச்சரவைக்கு சூழல் வன ஜீவ அதிகாரிகளினால் சமா்ப்பித்த அறிக்கையில்  வில்பத்து காணியில் முஸ்லீம்கள் குடியேறியதாக  அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.  

அவா்கள் முஸ்லீம்கள் என்றதற்காக இனரீதியாக சிந்திக்க வேண்டாம்.

அமைச்சா் அவா்களே  நீங்கள் அவன்காட் நிறுவனத்தினடம் பணம் பெற்றுள்ளீா்களா?
அமைச்சா் அப்படியானால் நிறுவியுங்கள்

அவன்காட் நிறுவனத்தின் நிதியில் – சரத்பொண்சேகா – அமைச்சா் விஜயதாச ராஜபக்ச  ஆகியோா் அவன்காட் சம்பந்தமாக உல்லாசமாக வெளிநாடு சென்ற புகைப்படங்கள் பத்திரிகையில் வெளிவந்துள்ளதே –  இது பற்றிய இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சா் விஜயாதாச கருத்துக்கள் வெளியிட்டாரா ?

அமைச்சா் – அவா் கருத்து வெளியிட வில்லை மவ்பிம பத்திரிகைதானே இதனை வெளியிடுகின்றாா்கள்.  அந்த பத்திரிகை முதல் பக்கத்தில் வைத்தியா்கள் வேலை நிறுத்தம் செய் தால் முன்பக்கமும் முழுப் பக்கமும் படமும் செய்தியும் எழுதுகீறீா்கள் தானே.

By

Related Post