அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் அளக்கட்டு,வேப்பங்குளம்,பிச்சை வாணிபக்குளம் கிராமங்களுக்கான ரூபா 85 மில்லியன் பெறுமதியில் காபட் பாதை அமைப்பதற்கான வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
அமைச்சரது இணைப்புச்செயலாளரான முஜாஹிர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதீதியாக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொரடாவுமான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்
இலங்கையில் நிலவும் நல்லாட்சியை தொடர்ந்து யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சிறுபான்மை மக்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயட்சியினால் தமது சொந்த இடங்களுக்கு மீண்டும் மீள்குடியேறிவருகின்றனர் இவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்கும் நோக்குடன் இக் காபட் பாதை செப்பனிடப்படுகின்றது
மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் முசலி பிரதேச சபை வேட்பாளர் ரிபாயி, பள்ளி நிருவாகிகள் மற்றும் கிராமமக்கள் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது