எ.எச்.எம்.பூமுதீன்
பதுளை மாவட்டத்தில் பல பகுதிகளில் இடம்பெற்றுள்ள மரணமடைந்த, காயமுற்ற மற்றும் பாதிப்புக்குள்ளகியுள்ள மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள அ. இ. ம.கா தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் இந்த மக்களுக்கு வேண்டிய உதவிகளை பெற்றுக் கொடுக்க முன்வருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது:
சுனாமி அனர்த்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அனர்த்தமாக இதனைப் பார்கவேண்டியுள்ளது.
சுமார் 300 பேர்வரை மண்ணுக்குள் அகப்பட்டுள்ளதாக இதுவரை வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய அளவில் பங்களிப்பை வழங்கிவரும் மலைநாட்டு பிரதேசமான பதுளை மாவட்டமும் அந்த மக்களும் இந்த அனர்த்தத்தில் சிக்கியிருப்பதானது உண்மையில் மற்றுமொரு பக்கம் நாட்டுக்கு பெரிய பொருளாதார இழப்பாகவும் நோக்கவேண்டியுள்ளது. மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்ற மறுகனமே அனர்த்த முகாமைத்துவ அமைச்சரை தொடர்பு கொண்டு உரையாடியதோடு – அவருக்கு வேண்டிய ஒத்துழைப்பை வழங்க தான் தயாராக இருக்கும் நிலையையும் எடுத்துக் கூறியதுடன், அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக முன்னர் கடமையாற்றியபோது பெற்றுக்கொண்ட அனுபவங்களை ஆலோசனைகளாக எடுத்துக் கூறியுள்ளேன்.
மண்சரிவு ஏற்றப்பட்ட பகுதிகளில் மீட்புபணி உட்பட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுத்து வருவதை அவதானிக்க முடிகிறது. இந்த சந்தர்ப்பத்தில் மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்துவிதமான உதவிகளை வழங்கவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளகக்ட்டி எழுப்பவும் முன்வருமாறு நாட்டு மக்களை அழைக்கிறேன் என்றும் அமைச்சர் றிஷாத் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.