கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கும், இலங்கைக்கான ஜேர்மன் நாட்டுத் தூதுவருக்கிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று 02/03/2015 ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை கட்டிடத்தில் நடைபெற்றது.
இதில் புதிய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளை அமைச்சர் தூதுவருக்கு விளக்கினார்,
இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக துறையை எவ்வாறு அதிகரிப்பது என்பதுடன், இரு நாடுகளுக்கிடையிளான சந்தை வாய்ப்பை அதிகரிக்க முயற்சிப்பதாகவும் தூதுவர் உறுதியளித்தார்.
அத்துடன் இரு நாடுகளுக்கிடையிலான திறமையான தொழிலாலர்களை (Skill labour)பரிமாறிக்கொள்வது போன்றவை கலந்துரையாடப்பட்டது.
அமைச்சர் கருத்துத்தெரிவிக்கையில் கல்வி,தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் போன்றவற்றுக்கு தொடர்ந்து உதவுமாறு கேட்டுக்கொன்டார்.