-றிஸ்கான் முகம்மட் –
கல்முனைகுடி கரைவலை மீனவர்களின் மிக நீண்ட கால பிரச்சினையாக உள்ள கடல் கழிவு அகற்றும் பிரச்சினை தொடர்பான சந்திப்பு நேற்று முன்தினம் (29) இரவு மட்டுப்படுத்தப்பட்ட கரைவலை மீனவர் கூட்டுறவுச் சங்க கட்டிடத்தில் சங்க தலைவர் முகம்மட் சப்றாஸ் (நளிம்) தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் பாராளுமன்ற விவாகர செயலாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி அமைப்பாளருமான எ.ஆர்.எம்.ஜிப்ரியிடம் மீனவர்களின் மிக நீண்ட கால பிரச்சினையான கடல் கழிவு அகற்றும் பிரச்சினை தொடர்பான விசேட அறிக்கையினை தலைவர் உட்பட செயல்குழு உறுப்பினர்கள் வழங்கி வைத்தனர் மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக அமைச்சர் றிசாட் விசேட தீர்வினை மேற்கொள்ள உள்ளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.