ஊடகப் பிரிவு
ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் ஒஸ்ரியாவில் இடம்பெற்ற விஷேட மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சரும் அ.இ.ம.கா. தேசிய தலைவருமான றிஷாத் பதியுதீன், நாளை 6 ஆம் திகதி ஒஸ்ரியாவிலிருந்து பிரான்ஸ் நாட்டுக்கு விஜயம் செய்கின்றார்.
இலங்கை – பிரான்ஸ் கூட்டு வர்த்தக சம்மேளனம் மற்றும் முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றும் பொறுட்டே அமைச்சர் றிஷாத் பிரான்ஸ் நாட்டுக்கு விஜயம் செய்கின்றார்.
குறித்த கலந்துரையாடலின்போது இலங்கை தற்போது அடைந்துவரும் வர்த்தக மேம்பாடு தொடர்பில் விரிவாக எடுத்துரைக்கவுள்ள அமைச்சர், இலங்கை அரசு, முதலீட்டு ஊக்குவிப்புக்காக வழங்கிவரும் ஒத்துழைப்புகள் குறித்தும் விளக்கமளிக்கவுள்ளதுடன் பிரான்ஸ் முதலீட்டாளர்களை இலங்கையில் அதிகளவு முதலீடு செய்யவருமாறும் இதன்போது அழைப்பு விடுக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அ.இ.ம.கா. பிரான்ஸ் கிளை உறுப்பினர்களை, கட்சியின் தேசிய தலைவர் றிஷாத் பதியுதீன் சந்தித்து உரையாடவுள்ளார். அத்துடன், கட்சியின் பிரான்ஸ் கிளையுடன் இணைந்துகொள்ள முன்வந்திருக்கும் புதிய அங்கத்தவர்களையும் உத்தியோக பூர்வமாக கட்சியிலும் இணைத்துக் கொள்ளவுள்ளார்.