அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான அ.இ.ம.கா. அரசியல் உயர்பீடம் நேற்றிரவு (08) கூடி நீண்ட நேரம் பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளது. பொதுவான அரசியல் நிலைலரங்கள் மற்றும் கட்சியின் சில விடயங்கள் குறித்தும் பல மணிநேரம் ஆராயப்பட்டுள்ளது.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி இன்றைய நல்லாட்சி அரசாங்கம் ஏப்ரல் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்றும் 19 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறான அனைத்துப் பரிந்துரைகள், திருத்தங்களை உள்ளவாறே நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் அரசை வலியுறுத்துவது என இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலாக, தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அதற்கான தேர்தலை நடைமுறையிலுள்ள விகிதாசார தேர்தல் முறையிலேயே நடத்த அரசை வலியுறுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தங்களது இந்த நிலைப்பாடுகளை நாட்டின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அறிவிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.