Breaking
Tue. Mar 18th, 2025

-சுஐப் எம்.காசிம் –

வெள்ளத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கொழும்பு பிரதேச,  குறிப்பாக வெல்லம்பிட்டிய, கொலொன்னாவை பிரதேச மக்களின் நிவாரணப் பணிகளையும், அவர்களின் இன்னோரன்ன தேவைகளையும் கவனித்து வரும், கொலொன்னாவை மஸ்ஜித் சம்மேளன நிர்வாகிகளுக்கு பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் சார்பிலும் நன்றி தெரிவிப்பதோடு, அவர்களுக்கு தொடர்ந்தும் பணிபுரியக் கூடிய சக்தியை இறைவன் வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் றிஷாத் நேற்று (23/05/2016) தெரிவித்தார்.

இந்தப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 27 பள்ளிகளின் உலமாக்கள், நிர்வாகிகளுடனான கலந்துரையாடலின்போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கொலொன்னாவை மஸ்ஜித் சம்மேளனத்தின் பணிகளில் தாமும் ஈடுபாடுகாட்டி, பணிகளை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியை தாம் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிவாரணம் பெறவரும் மக்களை மனதளவிலேனும் நோகடிப்பதை தவிர்க்குமாரும், அன்பான வார்த்தைகளால் இன்முகத்துடன் உதவிகளை வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இறைவன் திடமான மனநிலையை வழங்கி, அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்வைத் தொடங்குவதற்கான சூழ்நிலையை வழங்க வேண்டும் என்பதே, இன்று அனைவரின் பிரார்த்தனையுமாகும். இந்தப் பணிகளில் உதவும் அத்தனை பேருக்கும் இறைவன் நற்கூலியை வழங்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கலத்துரையாடலில் கொலொன்னாவை மஸ்ஜித் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் ஐ.வை.எம். ஹனீப், மௌலவி முபாரக் அப்துல் ரஷாதி உட்பட பல உலமாக்கள் பங்கேற்றனர்.

masjid masjid 2

By

Related Post