Breaking
Fri. Jan 10th, 2025

இலங்கை சட்டக் கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிசின் வேண்டுகோளுக்கினங்க கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவருமாகிய அமைச்சர் றிசாட் பதியுதினால் மாணவர்களின் பயன்பாட்டிற்கென 88,000ரூபா பெறுமதியான நீர் குளிரூட்டும் இயந்திரம் ஒன்றை தனது தனிப்பட்ட நிதியிலிருந்து வழங்கிவைத்தார்.

இந் நிகழ்வின் போது கருத்து தெரிவித்த இலங்கை சட்டக் கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிசின் தலைவர் ‘அமைச்சரிடம் நாங்கள் இவ் வேண்டுகோளை முன்வைத்தவுடன் அதனை ஏற்றுக்கொண்டு அதற்கான காசோலையை எம்மிடம் கையளித்தார். இதன் மூலம் எமது கல்லூரியில் இருந்த நீண்ட காலப் பிரச்சினை நிவர்த்திக்கப்பட்டுள்ளது.

தற்போது முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்துவரும் இவரின் சேவைகள் தொடர வேண்டும் என சட்டக்கல்லூரி முஸ்லிம் மாணவர்கள் சார்பாக இறைவனை பிராத்திக்கின்றோம். இந் நேரத்தில் எமக்கு இவ் உதவி கிடைக்ககாரணமாக இருந்த சிரேஷ்ட சட்டத்தரனி சிராஸ் நூர்டீன் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரனி றுஸ்டி ஹபீப் அவர்களுக்கும் எமது சட்டக்கல்லூரி மாணவர்கள் சார்பான மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.’எனத் தெரிவித்தார்.

மேலும் இந் நிகழ்வில் சட்டக்கல்லூரியின் அதிபர் உட்பட முஸ்லிம் மஜ்லிசின் அங்கத்தவர்களும் சட்டக் கல்லூரி மாணவர்கள் பலரும் கலந்துசிறப்பித்தனர்.

Related Post