Breaking
Fri. Jan 10th, 2025
ஜெஸ்மி எம்.மூஸா
மாகாணசபை உறுப்பினராக இருந்த காலத்தில் செய்த சேவையில் வெற்றிடம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை உணர்ந்து அமைச்சர் றிஸாட் பதியுதீனால் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி துல்ஹர் நயீமுக்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையில் நிறைவேற்றுப் பணிப்பாளர் நியமனம் வழங்கியுள்ளமை பாராட்டப்பட வேண்டியதாகும் என மருதமுனை சிவில் சமூக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
மருதமுனை வர்த்தக சங்கச் செயலாளர் ஏ.ஜே.எல். ஸீல் தலைமையில் மருதமுனையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாணத்திற்கான இளைஞர் விவகார அமைப்பாளரும் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான அன்வர் முஸ்தபா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் ஜீம்ஆப் பள்ளிவாசல் தலைவர்கள்-ஊரின் முக்கியஸ்த்தர்கள்-சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கு கொண்டனர்
ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் ஆற்றமுடியாத அளப்பரிய சேவையினை கல்முனைத் தொகுதிக்கு துல்ஹர் நஹீம் செய்திருந்தார். அதனைத் தொடரும் நோக்கில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையில் உயர்பதவி வழங்கியுள்ளதனால் அவரது பிரதேச மக்கள் என்ற வகையில் மருதமுனை மக்கள் மகிழ்ச்சியடைவதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது
மருதமுனை மக்களுக்கு மீண்டும் ஒரு அரசியல் அதிகாரம் ஒன்றை வழங்க அமைச்சர் றிஸாட் எடுத்த முடிவை மருதமுனை மக்கள் நன்றியுணர்ச்சியுடன் பாராட்டுவதாகவும் அமைச்சரை சந்தித்து எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கவுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது
அனுபவமும் மக்களுடன் இணைந்து பணியாற்றும் செயற்றிறனும் கொண்ட பொருத்தமான ஒருவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக மேற்படி கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதுடன் சட்டத்தரணி துல்ஹர் நஹீமின் கடந்த கால சேவை முன்னெடுப்புக்கள் குறித்து பலரும் கருத்து தெரிவித்தனர்

Related Post