Breaking
Fri. Jan 10th, 2025

அகமட் எஸ். முகைடீன்

கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெட்ரோ பொலிடன் கல்லூரியின் ஸ்தபகத் தலைவருமாகிய கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று  (05.06.2015) மாலை தனது ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டார்.

கைத்தொழில், வணிகத் துறை அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது கட்சியில் இணைந்து கொண்ட சிராஸ் மீராசாஹிப்பிற்கு கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர் பதவி அமைச்சர் றிஷாத்   பதியுதீனால் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது, கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் மற்றும் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

siras.jpg2_

Related Post