வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் முழுமையான மீள்குடியேற்றத்தை 2 வருடங்களுக்குள் நிறைவேற்றித்தாருங்கள் என கைத்தொழில், வணிகத் துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாத் பதியுதீன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 25 வது ஆண்டு நிறைவை நினைவு கூறும் வகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் இடம் பெற்றது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும்,வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் அங்கத்தினர் என்ற வகையிலும் இந்த கோறிக்கையினை தாம் முன்வைப்பதாகவும்,வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பாராளுமன்றத்தில் முழு நாள் விவாதமொன்றினை தாம் கோறவுள்ளதாகவும் கூறினார்.
1990 ஆம் ஆண்டு வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றம் ஏற்படுத்திய இழப்புக்களின் பெறுமதி இன்றைய கணிப்பில் 500 பில்லியன்களையும் தாண்டியுள்ளது.இந்த மக்கள் இன்று கோறி நிற்பது கௌரவமான மீள்குடியேற்றத்தினையே,
வடமாகாண சபையின் ஆட்சியினை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்று இரு வருடங்கள் கழிந்த நிலையிலும்,வடபுல முஸ்லிம்கள் தொடர்பில் இதுவரைக்கும் அவர்கள் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுத்ததாக தெரியிவில்லை.இது தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.இந்த மீள்குடியேற்றத்திற்கு ஜனாதிபதி,பிரதமர்,எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்,வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் ஆக்க பூர்வமான நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.
தமிழ் மக்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்,அவர்களுக்கான தீர்வு விடயத்தில் நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம்.அதே அதே போல் தமிழ் பேசும் தமது சகோதர சமூகத்தின் அகதி வாழ்விலிருந்து அவர்களை விடுவிக்கும் பயணத்தில் நீங்கள் உதவிகளை செய்ய வேண்டும்.
அதே போல் வடக்கில் இரானுவத்தினர் வசமிருந்த பல காணிகள் விடுவிக்கப்பபட்டுவருகின்றன.இதே போன்று சிலவாத்துறையில் இரானுவத்தினர் முஸ்லிம்களின் காணிகளில் முகாம் அமைத்திருக்கின்றனர்.எனவே இதனை அந்த மக்களுக்கு மீள பெற்றுக்கொடுக்க அரசாங்கம் ஆவணம் செய்ய வேண்டும்.
மீண்டும் வில்பத்து தொடர்பில் பேசப்படுகின்றது.வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அவலர்களது தாயகத்தில் மீள்குடியேற சென்ற போது,அங்கு அவர்களது காணிகள் காடுகளாக காணப்பட்டன,அதனை துப்பரவு செய்கின்ற போது,அதனை விலிபதது என்கின்றனர்.வடபுல முஸ்லிம்கள் அவ்வாறு எந்த காணிகளையும் எங்கும் அத்துமீறல்களை செய்ததில்லை.முடியுமென்றால் நிரூபித்துக்காட்டட்டும்.இ்நத காணிகள் தொடர்பில் ஜனாதிபதி குழுவொன்றினை அமைத்து விசாரணைகளை செய்ய வேண்டும்.என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பதில் செயலாளர் சுபைர்தீன்,யாழ் மாநாகர சபையின் முன்னாள் உறுப்பினர் மௌலவி சுபியான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.