Breaking
Fri. Jan 10th, 2025

மன்னார் செய்தியாளர்

நடை பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் மீண்டும் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவருமான றிசாத் பதியுதீன் அவர்களுக்கு வன்னி மாவட்ட மக்கள் மாபெரும் வரவேற்பு வைபவங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.

எதிர்வரும் சனிக்கிழமை 24 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று மற்றும் துனுக்காய் பிரதேசங்களிலும்,மாலை 4.00 மணிக்கு முசலி பிரதேச செயலகப் பிரிவிலும் இந்த வைபவங்கள் இடம் பெறவுள்ளது.முசலி பிரதேச ஏற்பாடுகளை முசலி பிரதேச சபை தவிசாளர் தேசமான்ய யஹ்யான் தலைமையிலான பிரதேச சபை பிரதி தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் மேற்கொண்டுவருவதாக பிரதி தவிசாளர் எஸ்.எம்.பைரூஸ் தெரவித்தார்.இந்த நிகழ்வுகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனைத்து மக்கள் பிரதி நிதிகளும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனியா பட்டாணிச்சுரிலும்,மறுநாள் திங்கட்கிழமை மன்னாரிலும் இந்த நிகழ்வுகள் இடம் பெறவுள்ளதாக மாவட்ட ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related Post