Breaking
Thu. Jan 9th, 2025

இர்ஷாத் றஹ்மத்துல்லா

இலங்கை அரசியலில் புரட்சிகரமான பணியினை ஆற்றியதுடன்,கடந்த காலத்தில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அனைத்து விதமான சதி நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து சிறுபான்மை மக்களையும் ஓரணியில் இணைத்துக் கொண்டு புதிய ஆட்சி மாற்றத்திற்கான பங்காளியாக பரிணமித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கைத்தொழில் வணிகத் துறை ,வாணிப அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களுக்கு இன்று மாலை மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச மக்கள் வரலாறு காணாத மாபெரும் வரவேற்பு நிகழ்வு ஒன்று தற்போது சிலாவத்துறையில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.

மன்னார்.முருங்கனில் இருந்து சிலாவத்துறை வரை மோட்டார் சைக்கிள் பவணி மூலம் அமைச்சர் றிசாத் பதியுதீன் அழைத்துவரப்பட்டார்.ஆண்களும்,பெண்களும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வரவேற்பு நிகழ்வின் போது கலந்து கொண்டனர்.

முசலி பிரதேச சபை தலைவர் யஹ்யான் தலைமையில் இடம் பெறும் இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான ஜயதிலக,றிப்கான் பதியுதீன் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.

rishad13.jpg2_3 rishad13 rishad12.jpg2_2.jpg3_2 rishad1.jpg2_.jpg4_.jpg66 rishad1.jpg2_.jpg4_ (1)

Related Post