Breaking
Sun. Dec 22nd, 2024

இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் சஹீத் சகீல் அஹமத் இன்று கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

பாகிஸ்தான் அரசு கடந்த காலங்களில் இலங்கை அரசுடன் முன்னெடுத்த வர்த்தக செயற்பாடுகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாகவும், புதிய அரசாங்கத்தின் கீழும் இச்செயற்பாடுகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாகவும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் இங்கு சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு வர்த்தக உடன்படிக்கையை தொடர்ந்து பயனுள்ளதாக முன்னெடுக்கப்படுவது தொடர்பிலும் இச்சந்திப்பின் போது அமைச்சர் கலந்துரையாடினார்.

By

Related Post