Breaking
Mon. Dec 23rd, 2024

– அஸ்ரப் ஏ சமத் –

வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகம் மற்றும் வட்டவான் இறால் பன்னைக்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் அழைப்பின் பெயரில் கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்கள் வருகை தந்து மீன்பிடியாளா்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆரயாப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படடது.

இதில் இறால் பன்னையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாகவும் அமைச்சா்களினால் ஆராயப்பட்டது
இவர்களுக்கான ஒரு காரியாலயம் அமைக்கப்பட வவேணடும் என பிரதி அமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு அமைய அடுத்த வருடம் அமைத்து தருவதாக கடற் தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அதேவேலை வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்திற்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களின் அழைப்பின் பெயரில் கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர வருகை தந்து மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக ஆராயப்பட்டு அதற்கான தீர்வு விரைவில் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள் , திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

By

Related Post