Breaking
Sun. Dec 22nd, 2024
சிறிலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான பல பில்லியன் டொலர் நிதியத்தை உருவாக்குவது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவுள்ளது.
இன்று கொழும்பு வரும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன், ஐ.நாவின் அனுசரணையுடன், இந்த நிதியத்தை உருவாக்குவது குறித்து பேச்சுக்கள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின்  பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் அமைதியைக் கட்டியெழுப்பும், நல்லிணக்க முயற்சிகள் பலவற்றுக்கும் ஆதரவை வழங்கும் வகையிலேயே இந்த நிதியத்தை உருவாக்குவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தவுள்ளது.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும்  அமைதியைக் கட்டியெழுப்பும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு அனைத்துலக ஆதரவு கிடைத்துள்ளது.
இதற்கு ஐ.நாவின் அங்கீகாரம் கிடைக்குமானால், ஐ.நாவின் கீழ் உள்ள அனைத்துலக அமைப்புகள் மற்றும் உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களும் சிறிலங்காவுக்கு உதவத் தயாராக இருக்கின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

By

Related Post