Breaking
Tue. Dec 24th, 2024

-ஊடகப்பிரிவு-

அம்பாரை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பசளை தட்டுப்பாட்டை உடனடியாக நீக்கி, அந்தப் பிரதேச விவசாயிகளுக்கு போதியளவு பசளையை அனுப்பி வைக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அமைச்சர் துமிந்த திஸாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

விவசாயத்துக்கு தேவையான போதியளவு பசளையை அனுப்பி வைக்குமாறு அமைச்சர் துமிந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அம்பாரை மாவட்ட விவசாயிகளின் கமத்தொழில் நடவடிக்கைகளுக்கு தேவையான யூரியா பசளையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையினால், அந்தப் பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடியை உடனடியாகத் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொத்துவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான எஸ்.எஸ்.பி.மஜீத், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தார்.

Related Post