முகம்மட்; அன்சார் – இறக்காமம்
பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முதன் முறையாக களமிறங்கவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆரம்ப கட்ட மக்கள் செல்வாக்கு சுமார் 25 ஆயிரம் என புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரியவருகின்றது.
புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அரசியல் விவகாரத்தை கையாளும் பிரிவின் அதிகாரி ஒருவர் தனக்கு நெருக்கமான ஒருவரிடம் இந்த தகவலை ஊர்ஜிதப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதன் பிற்பாடு குறிப்பாக 1994ம் ஆண்டுகளுக்கு பின்னர் முகாவின் அசைக்க முடியாத மாவட்டமாக அம்பாறை திகழ்ந்து வருகின்றது.
கடந்த கால பொதுத் தேர்தல்களில் அம்பாறை மாவட்டத்திலிருந்து மக்கள் வாக்களிப்பின் மூலம் 02,03 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியிலும் மாகாண சபையில் பல உறுப்பினர்களைப் பெற்றும் இம்மாவட்டத்தில் அசைக்க முடியாத கட்சியாக விளங்கும் முஸ்லிம் காங்கிரஸூக்கு எதிரான அரசியல் சக்திகள் மிகக் குறைவாகவே இம்மாவட்டத்தில் இருந்து வருகின்றன.
முகாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அதாவுல்லா முதற் தடவையாக களமிறங்கி வெற்றி பெற்ற போதிலும் அவரால் முகாவின் செல்வாக்கை அம்பாறை மாவட்டத்தில் பெருமளவில் சரிவடையச் செய்ய முடியவில்லை.
சுமார் 15 வருடங்களாக முன்னாள் அமைச்சர் அதாவுல்லா பலமிக்க அமைச்சராக இருந்த போதிலும் கூட அவரால் முகாவி;ன் செல்வாக்கை பலமிழக்கச் செய்ய முடியாமலே போனது.
இதற்கு காரணம் தனக்கு கிடைக்கப்பெற்ற பலமிக்க அமைச்சை அக்கரைப்பற்று எனும் பிரதேசத்துடன் அவர் மட்டுப்படுத்திக் கொண்டமையாகும். இதனால் அம்பாறை மாவட்டத்தின் ஏனைய முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தியிலும் தொழில் வாய்ப்பிலும் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியது. இந்த பின்னடைவையும் அபிவிருத்தியின்மையையும் சரிசெய்வதற்கு முகா கூட பின்வாங்கியே காணப்பட்டது.
முகாவின் இந்த பின்னடைவான செயற்பாட்டிற்கு காரணம் அதாவுல்லா அமைச்சராக வீற்றிருந்த அந்த 15 வருட காலத்தில் 13 வருடங்களை முகா எதிர்த்தரப்பு அரசியல் செய்துவந்தமை ஆகும்.
இந்த பின்னணியில் தான் அக்கரைப்பற்று தவிர்ந்த ஏனைய முஸ்லிம் பிரதேசத்து மக்கள் பெரும்பாலானோர் இந்த அபிவிருத்தி மற்றும் தொழில் வாய்ப்பில் ஏற்பட்ட சரிவை ஓரளவேனும் சரி செய்து கொள்வதற்காக மாற்றுக் கட்சியின் தேவையை உணர முற்பட்டனர்.
அந்த அடிப்படையில் தான் ரிசாத் தலைமையிலான அ.இ.ம.காவின் வருகை அம்பாறை மாவட்ட மக்களால் அவசியமாகவும் அவசரமாகவும் தேவைப்பட்டது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.கா தனித்துப் போட்டியிடலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படும் இன்றைய சூழ்நிலையில் இம்மாவட்டத்தில் இக்கட்சிக்கான செல்வாக்கு அசுர வேகத்தில் அதிகரித்து வருவதை உணர முடிகின்றது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் அ.இ.ம.கா வின் ஆரம்ப கட்ட மக்கள் செல்வாக்கு சுமார் 25 ஆயிரம் என்ற தகவல் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கபெற்றுள்ளது.
மேற்படி புலனாய்வுப் பிரிவின் தகவல்களின் படி ஆரம்ப கட்ட மக்கள் செல்வாக்குத்தான் 25 ஆயிரம் என கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்பாறை மாவட்டத்தில் தனித்து களமிறங்கும் அ.இ.ம.கா வுக்கு ஒரு ஆசனம் என்பது மறுபக்கம் ஊர்ஜிதப்படுத்தப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.கா தனது வேட்பாளர்களை இதுவரை பூர்த்தி செய்யாத நிலையில் அடுத்து வரும் நாட்களுக்குள் பலமிக்க வேட்பாளர்களை களமிறக்கும் பட்சத்தில் மேற்சொன்ன ஒரு ஆசனம் என்பது மேலும் ஊர்ஜிதமாகுவதுடன் எதிர்த்துப் போட்டியிடும் மற்றும் முஸ்லிம்களின் வாக்குகளை எதிர்பார்க்கும் கட்சிகளுக்கு மேலும் பின்னடைவையும் ஏற்படுத்தலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தல் வேளையின் போது மைத்திரி இத்தனை வீதத்தினால் வெற்றி பெறுவார் என்றும் மகிந்த ராஜபக்ச இத்தனை வீதத்தினால் தோல்வியடைவார் என்றும் புலனாய்வுப் பிரிவு இரகசியமாக வழங்கிய தகவல் ஜனவரி 08 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உண்மைப்படுத்தப்பட்ட விடயம் நாம் அனைவரும் அறிந்ததே